விஜய்யின் 68வது படப்பிடிப்பில் சோகம்.. முக்கிய பிரபலம் உயிரிழப்பு: சோகத்துடன் வெங்கட் பிரபு போட்ட டுவிட்..!

Author: Vignesh
27 December 2023, 11:21 am

லியோ படத்தை தொடர்ந்து தளபதி 68 படத்தில் விஜய் நடித்து வருகிறார். இப்படத்தை பிரபல இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கவுள்ளார் . அண்மையில் இப்படத்தின் பூஜை பிரம்மாண்டமாக நடைபெற்றது. இதில் பல நட்சத்திர பிரபலங்கள் நடிக்க உள்ளனர்.

குறிப்பாக பிரஷாந்த், மோகன், பிரபு தேவா, லைலா, சினேகா, மீனாட்சி சவுத்ரி என பல நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். இதன் முதல்கட்ட படப்பிடிப்பு முடிவடைந்த நிலையில் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தாய்லாந்தில் நடைபெற உள்ளது.

இந்நிலையில், சென்னை, தாய்லாந்து, ஹைதராபாத் என மாறிமாறி பட பிடிப்புகள் நடந்து வரும் நிலையில், தளபதி 68 படத்தில் இயக்குனர் வெங்கட்பிரபு தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் ஒரு சோகமான பதிவை பகிர்ந்துள்ளார். அதில், தயாரிப்பு குழுமம் ஏஜிஎஸ் நிறுவனத்தின் ஒருவரான ஜாய்சன் என்பவர் உயிரிழந்துள்ளதாக பகிர்ந்து உள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!