பார் தான் வீடு.. குடியும் கும்மாளமுமாய் பிரபல நடிகை : கோலிவுட் ஹாட் பேச்சு..!!
Author: Udayachandran RadhaKrishnan30 August 2025, 4:24 pm
எப்போதும் குடி கும்மாளம் என பாரே கதி என கிடக்கிறார் பிரபல நடிகை.
படிக்கும் போது படப்பிடிப்பு வாய்ப்பு கிடைத்தால், யோசிக்காமல் உடனே நடிகையானார். முதல் படமே தரமான ஹிட் கொடுத்ததால், அம்மணி காட்டில் அடை மழை பெய்தது.
மங்களகரமான நடிகையான அவருக்கு தொடர்ந்து முன்னணி நடிகர்களுடன் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. கதையை கேட்காமல் உடனே நடிக்க ஒப்புக்கொண்ட அவருக்கு தலைக்கனம் ஏறியது.
படப்பிடிப்புகளில் இயக்குநர்களை மதிக்காமல், வீண் செலவுகளை இழுத்து விட்டுள்ளார். நடிகையின் லீலைகள் வெளியே வரவர படவாய்ப்பு குறைந்துள்ளது.
இதையடுத்து குணச்சிதிர வேடம், துணை கதாபாத்திரம் வாய்ப்புகள் தான் கிடைத்தது. இதனால் ரொம்பவே அப்செட்டான நடிகை, மதுபோதைக்கு அடிமையாகியுள்ளார்.
படிப்புக்காக பிரேக் எடுத்துக் கொண்டேன் என வெளியே கூறினாலும், கிடைத்த படத்தில் நடித்த போது லட்சுமிகரமாக இருப்பாராம். ஆனால் பட வாய்ப்பு இல்லையென்றால், மன உளைச்சலில் குடியும் கும்மாளமுமாக வேறு முகமாக இருப்பாராம் இந்த இரண்டாவது சந்திரமுகி.
பட வாய்ப்பு இல்லாததால் பாரே என கிடக்கும் நடிகை சகவாசம் சரியில்லை என தோழிகள் புட்டு புட்டு வைக்கின்றனர். 29 வயதுதான் ஆகிறது, ஆனால் இப்போதே இப்படி ஆட்டம் போடுகிறாரே என ஒட்டுமொத்த திரையுலகமும் ஷாக் ஆகியுள்ளது.
