உனக்கென்னமா நீ மனநோயாளி.. சுசித்ராவுக்கு பயில்வான் ரங்கநாதன் பதிலடி..!

Author: Vignesh
18 May 2024, 11:19 am

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக இருக்கக்கூடிய அனைத்து நட்சத்திரங்களையும் படுமோசமாக பாடகி சுசித்ரா சமீபத்தில் youtube சேனலுக்கு அளித்த பேட்டியில் கண்மூடித்தனமாக விமர்சித்து இருந்தார். அதில், பயில்வான் ரங்கநாதன் குறித்தும் படுமோசமாக சுசித்ரா பேசியிருந்தார்.

இந்நிலையில், அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக அளித்த பேட்டியில் சுசித்ராவை கிரிமினல் நோயாளி என பயில்வான் ரங்கநாதன் கூறியுள்ளார். மேலும், சுசித்ரா பற்றி கார்த்திக் குமார் பேசிய அனைத்து ஆடியோவையும் வெளியிட்டு இருந்தார். ரசிகர்கள் சோசியல் மீடியாவில் அவரை தொடர்ந்து கண்டித்து வருவதையும் பதிவிட்டு இருந்தார்.

Suchitra Karthik

சுசித்ராவுக்கு ஆதரவாக பதிவுகளை போட்டு வரும் நடிகர்கள் மற்றும் ரசிகர்களையும் தனுஷ் ரசிகர்கள் திட்டி வருவது குறிப்பிடத்தக்கது. அதாவது, தமிழ் சினிமாவில் பிட்டு படங்களை அறிமுகம் செய்து வைத்ததே பயில்வான் ரங்கநாதன் தான் என்றும், தனுஷ் மற்றும் கார்த்திக் குமாருடன் சேர்ந்து கொண்டு தன்னை பற்றி பயில்வான் ரங்கநாதன் அவதூறாக பேசி வருவதாகவும், படு கேவலமான நபர் பயில்வான் என்று அளித்த பேட்டியில் கூறியிருந்தார்.

மேலும் படிக்க: ‘Call Girl’- பெண்ணை இழுத்துக் கொண்டு ஓடிய விஷால்?.. கமல், சிம்பு, யுவன் என இஷ்டத்துக்கு பேசும் சுசித்ரா..!

அதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக பேசிய பயில்வான் சுஜித்ரா நீ ஒரு கிரிமினல் மனநோயாளி அவரைப்பற்றி என்ன பேசுவது என்று அவர் சொல்லும் அனைத்து பொய்யான கருத்துக்கள் அதில் கொஞ்சம் கூட உண்மை இல்லை என்றும், அவர் பேசியதற்கு வழக்கு தொடர போகிறேன் என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். மேலும், விவாகரத்து செய்த பின்னர் முன்னாள் கணவர் குறித்து ஆபாசமாக பேசுவது குற்றம் என்றும், தொடர்ந்து கார்த்தி குமார் குறித்து சுசித்ரா சட்டத்திற்கு புறம்பான செயல் என்றும், ஏற்கனவே சுசித்ரா சுசி லீக்ஸ் விவகாரத்தில் பல நடிகர்களை அசிங்கப்படுத்தி இருந்தார்.

bayilvan ranganathan

மேலும் படிக்க: குடும்பத்தை விட்டு பிரிந்த விஜய்?.. திருமணத்திற்கு தனியா வந்த மனைவி சங்கீதா..!

அது தொடர்பாக சுசித்ரா மீது வழக்கு போடப்பட்ட நிலையில், நோயாளி என்று கூறி அந்த வழக்கிலிருந்து தப்பித்தார். தற்போது, youtube களில் பேட்டிகளில் முனிவர் போல சாபம் விடுகிறார். இவர் சாபம் விட்டால் என்ன பழிக்கவா போகிறது என்று பயில்வான் ரங்கநாதன் பதிலடி கொடுத்திருந்தார். மேலும், 6 மாதத்திற்கு முன்பாக சுசித்ரா எனக்கு போன் செய்து பேசிய போது, பழசை எல்லாம் மறந்துட்டேன் என்னை மன்னிச்சிடுங்க என்று கேட்டுக்கொண்டார். அதன் பின் பேட்டி எடுப்பதாக கூறினேன். நமக்கு எதுக்கு வீண் வேலை என சுசித்ராவை அழைக்க மறந்துவிட்டேன். அந்த கோபத்தில், தான் தற்போது வாய்க்கு வந்தபடி அவர் பேசுவது சட்டப்படி குற்றம் என்பது அவருக்கு தெரியுமா? தெரியாதா? என்று தெரியவில்லை என கூறியுள்ளார்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!