மனசும் உடம்பும் மறத்துப்போச்சு.. போதும்டா சாமி, அழுதுடுவேன்.. நொந்து போன பயில்வான்..!

Author: Vignesh
4 May 2024, 4:13 pm

இயக்குனர் சுந்தர் சி பல வெற்றிப்படங்களை கொடுத்து மக்களை கவர்ந்தவர். 2014 -ம் ஆண்டு சுந்தர் சி இயக்கத்தில் வெளியான அரண்மனை திரைப்படம் மாபெரும் வெற்றி பெற்று சாதனை படைத்தது. இதனை தொடர்ந்து அரண்மனை இரண்டாம் பாகம் மீண்டும் புதிய கூட்டணியில் உருவாக்கப்பட்டது. ஆனால் இப்படத்திற்கு கலவையான விமர்சனமே பெற்றது.

aranmanai - updatenews360

மேலும் படிக்க: கில்லி படத்தில் முதலில் நடிக்க இருந்தது யார் தெரியுமா? வாய்ப்பை விடாத விஜய்..!

இருப்பினும் அரண்மனை இரண்டாம் பாகம் திரையரங்கில் வெற்றிகரமாக ஓடி பாக்ஸ் ஆபிசில் வெற்றி பெற்றது. இதில் சித்தார்த், த்ரிஷா, ஹன்சிகா, சூரி போன்ற பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இதற்கு கிடைத்த வரவேற்பால் சுந்தர் சி ஆர்யாவை வைத்து அரண்மனை மூன்றாம் பாகத்தை உருவாக்கினார். அரண்மனை மூன்றாம் பாகத்திற்கும் கலவையான விமர்சனம் தான் வந்தது.

aranmanai 4

மேலும் படிக்க: கவுண்டமணி கூட அதை பண்ணனுமா?.. ஷாக்காகி பயந்து போன பிரபல நடிகை..!

இந்நிலையில், அரண்மனை 4 சுந்தர் சி இயக்கத்தில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் சுந்தர்சி, தமன்னா, ராசி கண்ணா, யோகி பாபு என பலரது நடிப்பில் இன்று அதிரடியாக அரண்மனை 4 படம் வெளியாகி உள்ளது. இந்த நிலையில், இன்று படு மாஸாக அரண்மனை 4 படமும் வெளியாகியுள்ளது. படத்திற்கான புரொமோஷன் எல்லாமே படு சூப்பராக நடந்து முடிந்தது.

aranmanai 4

பலமொழிகளில் அரண்மனை 4 படம் வெளியாகி உள்ளது. படத்தை பார்த்த பலரும் நன்றாக இருக்கிறது என்று பாசிடிவ் விமர்சனங்களை தெரிவித்து வருகிறார்கள். மேலும், ஒரு சிலர் எதிர்மறையான விமர்சனத்தை கொடுத்து பேசியுள்ளார். தலைப்பே சரியாக வைக்க தெரியாதவர்கள் தான் பார்ட் 1 பார்ட் 2 பார்ட் 4 என்று அடுக்கிக் கொண்டே போவார்கள் அந்த வரிசையில் இது ஒரு படம் என்று பயில்வான் தெரிவித்துள்ளார்.

ஆரம்பத்தில் ஒரு குட்டி கதை சொல்ல ஒருத்தி பேயாக மாறுகிறாள். நீ என் தங்கச்சியை கொன்னுட்டல்ல நீ என் தங்கச்சியா நடிக்கணும் என்று அவனும் செத்து விடுகிறான். ஏண்டா எங்க பொறுமைய சோதிக்கிறீங்க, கிட்டத்தட்ட 60 70 களில் இந்த மாதிரி படத்தை பார்த்து விட்டோம். மனசும் உடம்பும் மறுத்து போச்சு தமன்னா தான் எல்லாரையும் பேயாக இருந்து காப்பாத்துது ஒரு பேய் பங்களாவை விக்கிற கதையை எத்தனை படத்தில் காட்டி எங்களை மொக்கை அடிப்பீங்க போதும்டா சாமி அழுதுடுவேன்.

bayilvan ranganathan

யோகிபாபு காமெடிக்கு யாரும் சிரிக்கல, குழந்தைகள் கூட சிரிக்கல அழகா இருக்கிற தமன்னா பேயுடைய சாயல் இல்லை. ராசி கண்ணா நீங்கள் டாக்டர்தான் பேய் வீட்டில் குழந்தைகளை வச்சிருக்கீங்க என்று கலாய்த்து பேசியிருக்கிறார். மேலும், வி டி வி கணேசன் யோகி பாபுவுக்கும் ராசி கண்ணா வயசு என்ன உங்க வயசு என்ன என்று கிழித்து பேசி இருக்கிறார் பயில்வான். முகத்தில், எந்தவித நடிப்பு மாடுலேஷன் இல்லாமல் பேசுறாரு காமெடியும் இல்லாமல் பயமும் இல்லாமல் அந்தரத்தில் தொங்கிவிட்டு திருநங்கை போல் படம் எடுத்தால் எப்படி? என கேள்வி எழுப்பியுள்ளார். அரண்மனை மூன்று பார்ட்டு வந்த சீன்கள் அப்படியே அரண்மனை 4 ரில் வந்திருக்கு ஏன் வித்தியாசமாக எடுக்கவில்லை என்று கடுமையாக சுந்தர்சியை பயில்வான் ரங்கநாதன் கலாய்த்து உள்ளார்.

  • Fans Mock DD New Photos வயசானதால் ஞாபக மறதியா? DD போட்ட Photo.. கலாய்த்த நெட்டிசன்கள்!!
  • Views: - 202

    0

    0