பிரபல நடிகரின் காதல் வலையில் விஜயின் மனைவி? சர்ச்சையை கிளப்பிய பயில்வானின் மூக்குடைத்த நடிகர்..!

Author: Vignesh
9 January 2024, 2:39 pm

சர்ச்சைக்கு பெயர் போன நடிகரான பயில்வான் ரங்கநாதன் நடிகராக இருக்கும் போது கூட இவ்வளவு ஃபேமஸ் ஆகாத நிலையில், இப்போது சினிமா விமர்சகராக இருந்து கொண்டு பல முன்னணி நடிகர் நடிகைகளின் அந்தரங்கங்கள் குறித்து வெளிப்படையாக பேசி கடும் விமர்சனங்களை எதிர்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில், பேசிய பயில்வான் நடிகர் ஜெய் ஆகாஷை வம்பு இழுத்துள்ளார். அதாவது, ஜெய் ஆகாஷ் லண்டனில் இருந்து வரும் போது ஒரு பெண்ணுடன் வந்தார். அந்த பெண்ணும் இவரும் காதலித்தனர். நடிகர் ஜெய் ஆகாஷ் காதலித்து வந்த பெண் அவரை கழட்டி விட்டுவிட்டு வேறொரு டாப் நடிகரை திருமணம் செய்து கொண்டார் என மேடையில் பேசினார். ஜெய் ஆகாஷ் குறித்த கிசுகிசுவை நானே எழுதிருக்கிறேன். அந்த பெண் ஒரு பிரபல நடிகரை திருமணம் செய்தார் என சொல்ல, எல்லோரும் விஜய் என கூற, ரசிகர்கள் செம கடுப்பாகினர்.

bayilvan ranganathan

அந்த பெண் விஜயின் மனைவி சங்கீதா தான் என கிசுகிசுக்க பலரும் துவங்கிவிட்டநிலையில், இது குறித்து பேசிய ஜெய் ஆகாஷ் அப்படி எந்த சம்பவமும் நடக்கவில்லை. அந்த விஷயம் முழுவதும் பொய்தான். அதில், எந்த உண்மையையும் இல்லை என விளக்கம் கொடுத்து தற்போது பயில்வானின் சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!