அனிருத்தும் காவ்யா மாறனும் ஒன்னா இருந்தாங்க; ஆதாரம் இருக்கு?- சீக்ரெட்டை போட்டுடைத்த பிரபலம்!
Author: Prasad13 June 2025, 2:37 pm
அனிருத்-காவ்யா மாறன் காதல்?
கோலிவுட்டின் டாப் இசையமைப்பாளராக வலம் வரும் அனிருத், சமீப காலமாக முன்னணி நடிகர்களின் பல திரைப்படங்களுக்கு மோஸ்ட் வாண்டட் இசையமைப்பாளராக திகழ்ந்து வருகிறார். தற்போது ரஜினிகாந்தின் “கூலி”, “ஜெயிலர் 2”, கமல்ஹாசனின் “இந்தியன் 3”, விஜய்யின் “ஜனநாயகன்”, சிவகார்த்திகேயனின் “மதராஸி” உள்ளிட்ட பல டாப் நடிகர்களின் திரைப்படங்களுக்கு இசையமைத்து வருகிறார்.

இந்த நிலையில் அனிருத்தும் சன் டிவி நிறுவனர் கலாநிதி மாறனின் மகளான காவ்யா மாறனும் காதலித்து வருவதாக பேச்சுக்கள் அடிபட்டு வருகின்றன. இருவரும் அடிக்கடி சந்தித்து வருகிறார்கள் எனவும் விரைவில் இவர்கள் திருமணம் செய்துகொள்ளப்போகிறார்கள் எனவும் செய்திகள் வெளிவருகின்றன. ஆனால் இது குறித்த அதிகாரப்பூர்வ செய்திகள் இன்னும் வெளிவரவில்லை. எனினும் அனிருத், காவ்யா மாறன் ஆகிய இருவரும் இச்செய்தியை இதுவரை மறுக்கவும் இல்லை.
ஆதாரம் இருக்கு!

இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட பத்திரிக்கையாளர் பயில்வான் ரங்கநாதன், “அனிருத்தும் காவ்யா மாறனும் காதலில் இருப்பது நிஜம். இருவரும் அமெரிக்காவில் உள்ள லாஸ் வேகாஸ் நகரில் காதல் நிமித்தமாக சந்தித்தார்கள். அதற்கான ஆதாரம் இருக்கிறது. ஆனால் இது பெரிய இடத்து விவகாரம் என்பதால் இது இன்னும் வெளியே தெரியாமல் இருக்கிறது” என கூறியுள்ளார்.
