“சிகரெட்டுக்கு பதிலா தோட்டா…” Beast பட Second Look ! விஜய் ரசிகர்களுக்கு செம ட்ரீட்…!

22 June 2021, 8:38 am
Quick Share

தமிழ் சினிமாவில் பிரபல நடிகராக வலம் வருபவர் தளபதி விஜய், இவரது நடிப்பில் இறுதியாக மாஸ்டர் திரைப்படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் சுமாரான விமர்சனங்கள் வந்தாலும் ரசிகர்கள் வசூலில் ஓரளவு பரவால்லை.

பீஸ்ட் படத்திற்காக ஜார்ஜியா சென்று பத்து நாட்களுக்கான படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில் கொரோனா இரண்டாம் அலை காரணமாக “அப்புறம் பார்த்துக்கலாம் பாஸ்” என்று விஜய் செல்லமாக உத்தரவு போட்டுவிட்டார். தற்போது சென்னையில் உள்ளது விஜய், வீட்டில் தனது மகன் மற்றும் மகளுடன் மனைவியுடன் சந்தோஷமாக இருக்கிறார். இப்படி குடும்பத்தோடு நேரம் செலவிடும் விஜய்க்கு, ஃபேமிலி ஆடியன்ஸ் மத்தியில் மவுசு அதிகம்.

நேற்று பீஸ்ட் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டருக்கான பாராட்டு மழையில் நினைந்து கொண்டிருந்த பீஸ்ட் பட குழுவினர், ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுக்கும் விதமாக செகண்ட் லுக் போஸ்டரை நள்ளிரவு 12 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர். இதனை ரசிகர்கள் சமூக வலைதளங்களில் டிரண்ட் செய்து வருகின்றனர். சிகரெட்டுக்கு பதிலாக தோட்டாவை வாயில் வைத்து துப்பாக்கியை Load செய்வது அட்டகாசத்தின் உச்சகட்டம்.

Views: - 386

8

2