தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய பிரபல நடிகை? அதிரடி உத்தரவை பிறப்பித்த நீதிமன்றம்!
Author: Prasad17 July 2025, 4:25 pm
தங்க கடத்தல் புகாரில் சிக்கிய நடிகை!
பிரபல கன்னட நடிகையான ரன்யா ராவ் கடந்த மார்ச் மாதம் துபாயில் இருந்து விமானத்தில் பெங்களூர் வந்தபோது, அவரை விமான நிலைய அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் இருந்து ரூ.12.56 கோடி மதிப்பிலான 14.2 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் இது குறித்தான விசாரணையில் ரன்யா ராவ் தங்க கடத்தலில் ஈடுபட்டது உறுதியானது.
ஆனால் அதிகாரிகள் குற்றப்பத்திரிக்கையை சரியான நேரத்தில் தாக்கல் செய்யாததை காரணம் காட்டி அவருக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. எனினும் கடத்தல் தடுப்புச் சட்டத்தின் கீழ் அவர் காவலில் வைக்கப்பட்டிருந்தார்.

நீதிமன்றம் அதிரடி உத்தரவு!
இந்த நிலையில் தங்க கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூர் சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தண்டனை காலத்தில் ஜாமீன் வழங்கப்படக்கூடாது எனவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
தங்க கடத்தல் வழக்கில் சிக்கிய பிரபல கன்னட நடிகை ரன்யா ராவிற்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவு
