மேடையில் கதறி அழுத பென்னி தயாள் – கட்டிப்பிடிச்சு சமாதானம் செய்த பிரியங்கா!

Author: Shree
23 March 2023, 2:12 pm

சூப்பர் சிங்கரில் நடுவராக இருந்து பிரபலமானவர் பாடகர் பென்னி தயாள். திரைப்படப் பின்னணிப் பாடகரான இவர் மேற்கத்திய பாணியில் பாப் இசை பாடுவதில் வல்லவர். இவர் படித்துவந்த காலத்தில் எஸ்5 என்ற பெயரில் உருவான இசைக் குழுவில் சேர்ந்து பாடத் தொடங்கினார்.

ஏ. ஆர். ரகுமான் பென்னி தயாளின் திறமையைக் கண்டறிந்து வாய்ப்புக் கொடுத்தார். தொடர்ந்து நிறைய படங்களில் பாடல்களை பாடி வருகிறார். இவர் ரஜினி, கமல், அஜித், விஜய் உள்ளிட்ட முன்னணி ஹீரோக்களின் பாடல்களைப் பாடி இருக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் பல்வேறு நகரங்களில் இசை நிகழ்ச்சிகளில் பாடி வருகிறார். இந்நிலையில் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் அன்புடன் நான் என்ற ரவுண்ட் வந்துள்ளது. அதில் நடுவர்களுக்காக போட்டியாளர்கள் பாடல் பாடினார்கள். அப்போது பென்னி தயாள் மிகவும் எமோஷனலாகி அழுதுவிட்டார். உடனே அங்கிருந்த பிரியங்கா, அனுராதா உள்ளிட்டோர் அவருக்கு ஆறுதல் கூறினார்கள்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?