“ரெக்க மட்டும் இருந்தா, தேவத சார்” – அனிகாவின் புகைப்படத்தை பார்த்து புகழும் ரசிகர்கள்

25 February 2021, 7:52 pm
Quick Share

என்னை அறிந்தால் படத்தின் மூலம் திரிஷாவின் மகளாக அறிமுகமானவர் அனிகா சுரேந்திரன். அதன்பின் அஜித், நயன்தாரா ஆகியோரோடு விஸ்வாசம் படத்தில் நடித்தார் . அஜித்தும் இவரும் சேர்ந்து நடித்த உனக்கென்ன வேணும் சொல்லு, கண்ணான கண்ணே என இரண்டு பாடல்களும் தந்தை மகள் பாட்டு வரிசையில் டாப்பில் இருக்கிறது.

16 வயதே ஆகும் அனிகா, தமிழில் நடிப்பதற்கு முன் மலையாளத்தில் பல படங்கள் நடித்துள்ளார். அதில் பாஸ்கர் தி ராஸ்கல் படத்தில் நயன்தாராவிற்கு மகளாக நடித்தது மட்டுமில்லாமல் மம்முட்டியுடன் சேர்ந்து நடித்தார். அதன்பின் சில குறும்படங்களில் நடித்திருக்கிறார். அவ்வப்போது போட்டோ ஷூட் நடத்தி வரும் அனிகா, ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறான குயின் வெப்சீரீஸில் சிறுவயது ஜெயலலிதாவாக நடித்தார்.

தற்போது போட்டோஷூட்டில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அதில் பிங்க் நிற ஆடை அணிந்து பெரிய பெண்ணாக தெரிகிறார். இவரைத் தொடர்ந்து ஃபாலோ பண்ணி வரும் ரசிகர்கள் “ரெக்க மட்டும் இருந்தா, தேவத சார்” என புகழ்ந்து வருகின்றனர்.

Views: - 5067

18

3