ஒன்னு டயலாக்கை மாத்து.. இல்லை நடிகையை மாத்து.. பானுப்ரியாவை அசிங்கப்படுத்திய இளம் நடிகர்..!

Author: Vignesh
27 February 2024, 11:48 am

சினிமா உலகில் 80 மட்டும் 90 காலகட்டத்தில் பல நடிகர்களுக்கு ஜோடியாக நடித்தவர்கள் இன்று வாய்ப்பு கிடைக்காமல் ஒரு சிலர் சினிமாவில் இருந்து விலகி சின்னத்திரை பக்கம் சென்றுள்ளார்கள். ஒரு சிலர் அம்மா மற்றும் அக்கா கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருக்கின்றார்கள். அந்த வகையில், ஒரு காலகட்டத்தில் தனக்கென ஒரு அங்கீகாரத்தை பெற்றுள்ள நடிகைதான் பானுப்பிரியா.

bhanupriya-updatenews360

இவரைப் பற்றியான சில தகவல் சமீபத்தில் வெளியாகி உள்ளது. கடந்த, 1990களில் ரஜினி, விஜயகாந்த், கார்த்திக், கமல் போன்ற நடிககைளுடன் இணைந்து நடித்துள்ளார். இவர் சுமார் 100க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

bhanupriya-updatenews360

இப்படி ஒரு நிலையில், சமீபத்தில் பத்திரிகையாளர் செய்யாறு பாலு ஒரு பேட்டியில் பானுப்பிரியா சைதை தமிழரசியாக பங்காளி படத்தில் நடித்த நடிப்பை எல்லாம் இப்போது இருக்கும் நடிகைகள் கனவிலும் நினைத்துப் பார்க்க முடியாது. சமீபத்தில், வசனங்களை நினைவில் வைத்துக்கொண்டு பேச முடியவில்லை என்றும், மறதி நோய் ஏற்பட்டு இருப்பதாகவும், சினிமாவிலிருந்து நடிப்பை நிறுத்தி விட போவதாகவும், அவரே கூறி இருக்கிறார் என்று செய்யாறு பாலு தெரிவித்திருந்தார்.

bhanupriya-updatenews360

மேலும், ஒரு படத்தில் நடிக்கும் போது வசனங்களை மறந்து விட்டு தவித்ததாகவும், அந்த படத்தின் ஹீரோவுக்கும் தனக்கும் பல காமினேஷன் காட்சிகள் இருந்த நிலையில், ஒன்னு டயலாக் மாத்து… இல்லன்னா நடிகை மாத்து… என்று அந்த இளம் நடிகர் அசிங்கப்படுத்தியதாக கூறி பானுப்பிரியா அழுது இருந்தார். அந்த நடிகர் யார் என்று அவர் ரிவில் செய்யாமல் தன்னுடைய பக்குவத்தை இப்படி ஒரு விஷயத்திலும் விட்டுக் கொடுக்கவில்லை என்று செய்யாறு பாலு தெரிவித்து இருந்தார். மேலும், 80 s ரியூனியன் நிகழ்ச்சிகளில் கூட சக நடிகர்கள் தன்னை அழைக்காமல் இருப்பது மிகவும் வருத்தமாக இருப்பதாகவும், பானுப்ரியா புலம்பியதாக அவர் தெரிவித்து இருந்தார்.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?