Serial-ல சாதாரண புடவை, வெளிய ஸ்லீவ்லெஸ் புடவையா? பாரதி கண்ணமா நடியின் Glamour VIDEO !
Author: kavin kumar29 August 2021, 7:29 pm
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல தொடர்கள் தற்போது அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் பாரதிகண்ணம்மா நாடகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கு பாதி காரணம், அந்த நாடகத்தில் வரும் கண்ணம்மா என்ற கதாபாத்திரம் ரொம்ப நாட்களாக நடந்து கொண்டே இருப்பது போன்ற காட்சி வைக்கப்பட்டிருந்தது.
அதை மீம் க்ரியேட்டர்கள் எடுத்து கன்னாபின்னாவென ஓட்ட, நாடகம் மட்டுமில்லாமல் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி ஹரிப்ரியனும் புகழ் அடைய ஆரம்பித்தார். மாடலிங் துறையில் இருந்து வந்த ரோஷினி அதன்பின் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். நாடகத்திற்கு வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.
இன்ஸ்டாகிராமில் இவரை ஃபாலோ செய்து கொண்டிருக்கும் ரசிகர்களுக்கு அவ்வபோது கண்ணுக்கு குளிர்ச்சியாக சில புகைப்படங்களை வெளியிட்டு வருகிறார். தற்போது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ள அவர் அதில் தூரிகா பாடலுக்கு கேன்டிட் போஸ்களை கொடுத்துள்ளார்.
36
8