என்ன கண்ணம்மா இப்படி? – பாரதி கண்ணம்மா நடிகையின் வித்தியாசமான ஃபோட்டோ

27 January 2021, 4:30 pm
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பல தொடர்கள் தற்போது அதிகம் பார்க்கப்பட்டு வருகிறது. அந்த வரிசையில் பாரதிகண்ணம்மா நாடகம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதற்கு பாதி காரணம், சில மாதங்களுக்கு முன் அந்த நாடகத்தில் வரும் கண்ணம்மா என்ற கதாபாத்திரம் ரொம்ப நாட்களாக நடந்து கொண்டே இருப்பது போன்ற காட்சி வைக்கப்பட்டிருந்தது.

அதை மீம் க்ரியேட்டர்கள் எடுத்து கன்னாபின்னாவென ஓட்ட, நாடகம் மட்டுமில்லாமல் கண்ணம்மா கதாபாத்திரத்தில் நடித்த ரோஷினி ஹரிப்ரியனும் புகழ் அடைய ஆரம்பித்தார். மாடலிங் துறையில் இருந்து வந்த ரோஷினி அதன்பின் பாரதிகண்ணம்மா தொடரில் நடித்துக் கொண்டிருக்கிறார். நாடகத்திற்கு வரவேற்பு இருக்கிறதோ இல்லையோ இவருக்கு ஒரு தனி ரசிகர் பட்டாளமே இருக்கிறது.

இன்ஸ்டாகிராமில் இவரை சோலை செய்து கொண்டிருக்கும் ரசிகர்கள் தற்போது இவர் வெளியிட்டு இருக்கும் ஒரு புகைப்படத்தை பார்த்து ஆகா ஓகோ என்கிறார்கள். இந்த புகைப்படத்தில் பாரதியாரின் வேடமணிந்து போஸ் கொடுத்திருக்கிறார். இதைப்பார்த்த ரசிகர்கள் எங்கும் பாரதி எதிலும் பாரதி போலயே என மெச்சிக் கொண்டு வருகின்றனர்

Views: - 12

0

0