பசங்க, படத்தில் ஒரு பையனுக்கு அம்மாவா நடித்த செந்தில் குமாரியா இது ? இப்போ இவங்க வேற மாதிரி…!

Author: Udayaraman
5 August 2021, 6:10 pm
Quick Share

‘பசங்க’ படத்தில் அன்பான அம்மாவாக எல்லோரின் மனங்களிலும் இடம்பிடித்தவர், செந்தில்குமாரி. வெள்ளித்திரை மட்டுமல்ல சின்னத்திரையிலும் என் நடிப்புத் திறமையை வெளிப்படுத்துவேன் என தற்போது ‘சரவணன் மீனாட்சி’ தொடரில் அன்பான மாமியாராக நடித்து வருகிறார். தன்னுடைய கீச்சுக் குரலால் அனைவரின் பாராட்டையும் பெற்றவர்.

, ‘மெர்சல்’ படத்தில் தன்னுடைய உருக்கமான நடிப்பினால் அனைவரையும் கண்கலங்க வைத்தவர். தன்னுடைய எதார்த்தமான நடிப்பினால் அனைவரையும் ஈர்ப்பவர். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ‘பாரதி கண்ணம்மா’ சீரியலில் நடித்துக்கொண்டிருக்கிறார்.

திருமணத்துக்கு அப்புறம்தான் நடிக்கவே வந்த இவர் தளபதி விஜயின் தீவிர ரசிகையாம். விஜயை பார்க்கவேண்டும் என அவரின் நீண்ட நாள் ஆசையை திருப்பாச்சி படம் மூலம் நிறைவேறியது. இப்போது சீரியல்களில் நடித்து வரும் இவர், ஆடுகளம் படத்தில் பேட்டைகாரன் மனைவியாக நடித்த மீனாலின் அக்கா.

தற்போது 40 வயதுக்கு மேல் ஆகும் இவர், சீரியல்களிலும் படங்களிலும் அம்மா கேரக்டரில் மற்றும் மாமியார் ஆகவும் நடித்து கொண்டிருக்கிறார், ஆனால் தற்போது இன்ஸ்டாகிராமில் இவரை பார்த்த பலர் உருகி தான் வருகிறார்கள். அதுவும் சமீப காலத்தில் டீசர்ட்டில் இவரது புகைப்படங்களைப் பார்த்து, அதை ஏடாகூடமாக கமெண்ட் செய்து வருகிறார்கள்.

இவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் இளம் நடிகைகளை போல் புகைப்படங்களை வெளியிட்டுள்ளது ரசிகர்களை குஷியில் ஆழ்த்தியுள்ளது. இந்த புகைப்படங்களை காண மட்டுமே நிறைய பேர் இன்ஸ்டாகிராம் கணக்கு உருவாக்கி வருகின்றனர்.

Views: - 623

3

2