காத்து பலமா அடிச்சா நழுவிரும் போலையே – மெலிதான ஆடையில் கவர்ந்திழுக்கும் போஸ் கொடுத்த பவானி ஸ்ரீ

17 January 2021, 4:22 pm
Quick Share

விஜய் சேதுபதி – ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து ரம்மி, தர்மதுரை, பண்ணையாரும் பத்மினியும் உட்பட பல படங்களில் நடித்து உள்ளார்கள். கடைசியாக கா/பெ ரணசிங்கம் படத்தில் கணவன் மனைவியாக நடித்திருந்தார்கள். இந்த படத்தில் விஜய்சேதுபதிக்கு தங்கை கதாபாத்திரத்தில் புதுமுகமாக பவானி ஸ்ரீ நடித்திருந்தார். பவானி ஸ்ரீ வெயில், ஆயிரத்தில் ஒருவன், மயக்கம் என்ன, தெய்வத்திருமகள் போன்ற படங்களுக்கு இசையமைத்த ஜிவி பிரகாஷின் தங்கை ஆவார். தனது முதல் படமான க/பெ ரணசிங்கம் படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார் பவானி ஸ்ரீ.

அதன்பின் நெட்பிளிக்ஸில் பாவகதைகள் எனும் ஆந்தாலஜி படம் வெளியானது அதில் சுதா கொங்கரா இயக்கிய தங்கம் படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்த படத்தில் இவரது நடிப்பு மட்டுமின்றி சத்தாராக நடித்திருந்த காளிதாஸ் ஜெயராமனின் நடிப்பும் பெரும் பாராட்டைப் பெற்றது.

தொடர்ந்து படங்களில் நடிக்க ஆர்வம் காட்டிவரும் பவானி ஸ்ரீ சமூக வலைத்தளத்தில் தனது புகைப் படங்களைப் பதிவேற்றி வாய்ப்பு தேடி வருகிறார். அவர் தற்போது வெளியிட்டுள்ள புகைப்படத்தில் மெலிதாக ஆடை அணிந்து போஸ் கொடுத்துள்ளார். காத்து பலமா அடிச்சா நழுவிரும் போலையே என ரசிகர்கள் சொல்லுமளவு லேசான ஆடை அணிந்து போஸ் கொடுத்து கிளுகிளுப்பை கூட்டியிருக்கிறார்

Views: - 0

0

0