“இந்த நாடும், நாட்டு மக்களும், நாசமா போகட்டும்” – பூமி பட இயக்குனர் கோபம் !

20 January 2021, 11:00 am
Quick Share

ஜெயம் ரவி நடித்துள்ள பூமி படம், இந்த பொங்கலுக்கு ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாகியது. இந்த படத்தை லக்ஷ்மன் இயக்கி, D இமான் இசையமைத்துள்ளார். லக்ஷ்மன் ஏற்கனவே ஜெயம் ரவியை வைத்து, ரோமியோ ஜூலியட், போகன் ஆகிய படங்களை இயக்கியுள்ளார்.

படம் பார்த்த மக்கள், “விவசாயம், Corporate என அதே அரைச்ச மாவு போல் நச நச என்று இருக்கிறது. இந்த சினிமாக்காரனுங்க கிட்டேந்து விவசாயத்தை காப்பாத்துங்கடா” என்று புலம்பி வருகிறார்கள்.

இந்நிலையில், ‘பூமி’ படம் பார்த்துவிட்டு ரசிகர் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “இதுவரை நான் பார்த்த படங்களில் ‘பூமி’ போன்ற ஒரு மோசமான படத்தைப் பார்த்ததில்லை. ‘சுறா’, ‘ஆழ்வார்’, ‘அஞ்சான்’, ‘ராஜபாட்டை’ வரிசையில் இந்த படம் அமைந்துள்ளது. இயக்குநர் லக்‌ஷ்மணுடன் பணிபுரிவதை நிறுத்துங்கள் ஜெயம் ரவி” என்று தெரிவித்தார்.

அதை பார்த்த பூமி பட இயக்குனர் லக்ஷ்மன், “சார். நம்ம எதிர்காலத் தலைமுறை நல்லா இருக்க வேண்டும் என்று நினைத்துதான் இந்தப் படம் எடுத்தேன். உங்களுக்காகத்தான் எடுத்தேன். ‘ரோமியோ ஜூலியட்’ எடுத்த எனக்கு கமர்ஷியல் தெரியாதா? நம் நாடும் நாட்டு மக்களும் நாசமாய் போகட்டும் ப்ரோ. நீங்க சூப்பர், ஜெயிச்சிட்டீங்க. நான் தோத்துட்டேன்” இவ்வாறு கோபமாக Tweet செய்திருக்கிறார்.

Views: - 0

0

0