Big Boss 4 Promo Video பராக் !

28 August 2020, 12:50 pm
Quick Share

கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பு ஆகும். நான் என்ன சொல்லவரன்னு எல்லோரும் யூகிச்சு இருப்பீங்கனு நினைக்கிறேன், ஆம் Big Boss தான். கரோனா அச்சுறுத்தலால் அது குறித்து செய்திகள் வெளிவராமல் இருந்தது.

அதனால், இந்த முறை பிக் பாஸ் நிகழ்ச்சி இருக்காது என்று தகவல் பரவியது. ஆனால் இந்தி, தெலுங்கில் இந்த ஆண்டிற்கான பிக் பாஸ் நிகழ்ச்சி படப்பிடிப்பு ஆரம்பித்தது. அதன் பின் தமிழிலும் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டது.

சில தினங்களுக்கு முன்பு ‘பிக் பாஸ் 4’ தொடர்பான ப்ரமோவுக்கான படப்பிடிப்பை கமல் தொடங்கிவிட்டார் என்று தகவல் வெளியானது. அதன் பின்னே பிக் பாஸ் ரசிகர்கள் உற்சாகம் ஆனார்கள். இதற்கிடையே, நேற்று இரவு 8 மணிக்கு முக்கிய அறிவிப்பு என்ற ஒரு விளம்பரத்தை விஜய் டிவி தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டது. பலரும் இது பிக் பாஸ் தொடர்பான அறிவிப்புதான் எனக் காத்திருந்தனர்.

சொல்லிவைத்தாற் போல் தற்போது ‘பிக் பாஸ் 4’ நிகழ்ச்சிக்கான டீஸரை கமல் தனது ட்விட்டர் வீடியோவில் வெளியிட்டுள்ளார். இதற்கு ரசிகர்கள் பலரும் வரவேற்பு தெரிவித்துள்ளனர். கமல் புதிய கெட்டப்பில் இந்த ப்ரமோவில் நடித்துக் கொடுத்துள்ளார். இது குறித்து சமூக வலைதளத்தில் ஒரு பெரிய பரபரப்பு ஏற்பட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.