பிக்பாஸ் 4 – ல் பிகில் பட நடிகை – இப்போதே ஆர்மி ஆரம்பித்த ரசிகர்கள் !

15 September 2020, 1:00 pm
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பு ஆகும். இப்போது கரோனா அச்சுறுத்தலால் அக்டோபர் மாதத்தில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த முறையும் உலகநாயகன் கமலஹாசன் அவர்களே தொகுத்து வழங்குவார் என உறுதி செய்யப்பட்டுள்ளது. அது தவிர தற்போது இணையதளத்தில் உலவும் தகவல்கள் என்ன என்றால், இந்த நிகழ்ச்சியில், இஸ்பேட் ராஜாவும் இதய ராணியும் பட கதாநாயகி ஷில்பா மஞ்சுநாத் கலந்து கொள்கிறார். இதற்காக இவருக்கு ஒரு கோடி ரூபாய் சம்பளம் பேசப்பட்டுள்ளது என கூறுகிறார்கள்.

மேலும் இந்த நிகழ்ச்சியில், ஷிவானி நாராயணன், புகழ், அதுல்யா ரவி, அமிர்தா ஐயர், பூனம்பாஜ்வா, கிரண் போன்றவர்களும் கலந்து கொள்ள போவதாக செய்திகள் வருகிறது.

இந்நிலையில், பிகில் படத்தின் மூலம் பிரபலமான நடிகை அம்ரிதா ஐயர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ளவுள்ளார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே அவருக்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருக்கிறார்கள். இந்த தகவலை அறிந்த ரசிகர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கும் முன்பே அம்ரிதாவுக்கு ஆர்மி ஆரம்பித்துள்ளனர்.

Views: - 1

0

0