நீங்கள் ஆவலுடன் எதிர்பார்த்த பிக் பாஸ் போட்டியாளர் வெளியேறுகிறார்.. அதிகாரப்பூர்வ தகவல்!

Author: Udayachandran RadhaKrishnan
2 November 2024, 3:34 pm

தமிழ் பிக் பாஸ் சீசன் 8 நிகழ்ச்சி விறுவிறுப்பான கட்டத்த எட்டி வருகிறது. முன்போல இல்லாமல் இருந்த நிகழ்ச்சி தற்போது தான் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது.

18 போட்டியாளர்கள் பங்கேற்ற பிக் பாஸ் நிகழ்ச்சியில், ரவீந்தர், அர்னவை தொடர்ந்து கடந்த வாரம் தர்ஷா குப்தா வெளியேற்றப்பட்டார்.

இந்த வாரம் யார் வெளியேற போகிறார் என்ற எதிர்பார்ப்பு பார்வையாளர்கள் மத்தியில் எழுந்த நிலையில், அவர்கள் யூகித்தவர்கள் தான் இந்த வாரம் வெளியேற போகிறார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

இதையும் படியுங்க: அஜித்தையே ஆஃப் செய்த அமரன்… ஒட்டுமொத்த பாக்ஸ் ஆபிஸையே அதிர வைத்த எஸ்கே!

இந்த வாரம் எலிமினேஷக்குக்கான நாமினேசனில், சுனிதா, ஜனனி, ஜாக்குலின், அன்ஷிதா, ரஞ்சித், அருண், சத்யா மற்றும் தீபக் இருந்தனர்.

அதே சமயம் நாமினேஷன் ப்ரீ டாஸ்கில் பெண்கள் அணி சுனிதாவை காப்பாற்றினர். இந்த வாரம் யார் வெளியறே போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவிய நிலையில், அன்ஷிதா வெளியேற உள்ளதாக தகவல் காட்டுத்தீ போல பரவுகிறது

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!