பிக்பாஸ் – 4 போட்டியாளர்களுக்கு சம்பளம் எவ்வளவு ? பாலாவுக்கு இவ்வளவு கம்மியா ?

18 January 2021, 11:41 am
Quick Share

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு தொடங்கி, அதன் பின் ஒவ்வொரு ஆண்டும் இந்த நிகழ்ச்சியை ஜூன் அல்லது ஜூலை மாதத்தில் ஒளிபரப்பு ஆகும். இந்த சீசன் கடந்த வருடம் அக்டோபர் 4-ஆம் தேதி தொடங்கியது.

இந்த நிகழ்ச்சியில் , ஷிவானி நாராயணன், சனம் ஷெட்டி, ரம்யா பாண்டியன், ஜித்தன் ரமேஷ், தொகுப்பாளரும் நடிகருமான ரியோ ராஜ், குட்டி பாபி சிம்ஹா என்று அறியப்படும் பாடகர் அஜீத் காலிக் ஆகியோரும். விஜய் டிவி கேப்ரில்லா, ரேகா, பாலாஜி முருகதாஸ், அறந்தாகி நிஷா, சோம், வேல்முருகன், சுரேஷ் சக்கரவர்த்தி,ஆரி, அனிதா சம்பத், அர்ச்சனா, சுசித்ரா என வழக்கம் போல் 14 போட்டியாளர்கள் இல்லாமல் இந்தமுறை 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டு உள்ளார்கள்.

இதன்படி இந்த சீசன் போட்டியாளர்கள் எல்லோருக்கும் எவ்வளவு நாட்கள் உள்ள இருக்கிறார்களோ, அதற்கேற்றார் போல் சம்பளம் என பேசிவிட்டார்கள். அவர்களின் டெய்லி சம்பளம் எவ்வளவு என்றால்…

ரேகா: ரூ.1 லட்சம் x 14( நாட்கள்) = 14 லட்சம்
சனம்ஷெட்டி: ரூ.1 லட்சம் x 63 ( நாட்கள்) = 63 லட்சம்
ஆரி: ரூ.85,000 x 105 ( நாட்கள்)+ 50 லட்சம் = 1 கோடியே 35 லட்சம் 25 ஆயிரம்
சுசித்ரா: ரூ.80,000 x 17 ( நாட்கள்) = 13.60 லட்சம்
அர்ச்சனா: ரூ.75,000 x 67 ( நாட்கள்) = 50.25 லட்சம்
ரம்யா பாண்டியன்: ரூ.75,000 x 105 ( நாட்கள்) = 78.75 லட்சம்
கேப்ரில்லா: ரூ.70,000 x 102( நாட்கள்) + 5 லட்சம் = 76.40 லட்சம்
ஷிவானி: ரூ.60,000 x 98( நாட்கள்)= 58.80 லட்சம்
ரமேஷ்: ரூ.60,000 x 69( நாட்கள்) = 41.40 லட்சம்
வேல்முருகன்: ரூ.50,000 x 28( நாட்கள்) = 14 லட்சம்
நிஷா: ரூ.40,000 x 70 ( நாட்கள்) = 28 லட்சம்
சம்யுக்தா: ரூ.40,000 x 56 ( நாட்கள்) =22.40 லட்சம்
அனிதா சம்பத்: ரூ.40,000 x 84 ( நாட்கள் ) = 33.60 லட்சம்
ரியோ: ரூ.35,000 x 105( நாட்கள்) = 36.75 லட்சம்
ஆஜித்: ரூ.15,000 x 91 ( நாட்கள் ) =13.65 லட்சம்
சுரேஷ்: ரூ.10,000 x 35 ( நாட்கள் ) =3.50 லட்சம்
சோம்: ரூ.10,000 x 105 ( நாட்கள் ) = 10.50 லட்சம்
பாலா: ரூ.10,000 x 105 ( நாட்கள் ) = 10.50 லட்சம்

இதில் சோகமான நிகழ்வு என்ன என்றால், இந்த நிகழ்ச்சியின் ரன்னர் ஆன பாலாஜி மற்றும் சோம்க்குதான் மிகவும் கம்மியான சம்பளம்.

Views: - 0

0

0