தப்புன்னு தெரிஞ்சா கண்டிப்பா திருத்திக்குவோம்.. விஜய்யின் அரசியல் கட்சியில் ஏற்பட போகும் பெரிய மாற்றம்?..

Author: Vignesh
17 February 2024, 2:05 pm

சினிமாவை பொறுத்தவரை நல்ல நல்ல படங்களில் நடித்து தொடர் ஹிட் கொடுத்து மக்கள் மனத்தில் நல்ல ஒரு இடத்தை பிடித்துவிட்டால் நடிகர்களின் அடுத்தகட்ட வளர்ச்சியாக தேர்ந்தெடுக்கும் ஒரே விஷயம் “அரசியல் ” சினிமாவை தாண்டியும் அரசியல்வாதியாக இருப்பதும் நல்ல சக்ஸஸ் தான் கொடுக்கும் என்பதை நிரூபித்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது வளர்ச்சியையும் வெற்றிகளையும் பார்த்து வளர்ந்து வரும் ரஜினி, கமல், விஜய் உள்ளிட்ட பல டாப் நடிகர்களுக்கு அரசியல் மோகம் வந்துவிட்டது.

அவர்கள் படங்களில் நடித்து பெயரை சம்பாதித்துவிட்டு அதைவைத்து அரசியலில் குதித்துவிட்டார்கள். அப்படித்தான் நடிகர் விஜய்யும் அரசியலுக்கு வரவேண்டும் என பல வருடங்களாக முனைப்புடன் இருந்து வந்தார். இப்போது தான் அதற்காக சரியான நேரம் வந்துள்ளது. விஜய் மக்கள் இயக்கம் மூலம் அரசியல் கட்சிகளுக்கு நிகராக பல்வேறு சமூக பணிகளில் ஈடுபட்டு வந்தார்.

இந்நிலையில், விஜய் கைவசம் இருக்கும் படத்தில் மட்டும் நடித்து சினிமாவிலிருந்து விலகி விடுவேன் என்று கூறியது அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருந்தது. அதாவது, அரசியல் கட்சி தொடங்கிய விஜய் தமிழக வெற்றி கழகம் என தொடங்கியிருந்த நிலையில், தமிழக வெற்றிக்கழகம் என வரும் என பலர் கருத்து தெரிவித்திருந்தார்கள். தற்போது, அந்த பிழையை விஜய் மாற்ற முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதனை பார்த்த ரசிகர்கள் தப்பு என்று தெரிஞ்சா உடனே மாத்திக்குவாறு எங்க தளபதி என்று ஆதரவாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!