ஹீரோவாகிறார் பிக் பாஸ்-3 ‘வெற்றி’யாளர் முகேன் ராவ் ! படத்தின் ஃபர்ஸ்ட் லுக் உள்ளே !

28 September 2020, 11:59 am
Quick Share

பிக் பாஸ் 3 ஆரம்பத்தில், அமைதியாக வெளியே தெரியாமல் இருந்த முகேன், மீராவை எதிர்த்ததால் அனைவரின் கவனத்தையும் பெற்றார். தைரியமாக விளையாட்டை விளையாடும் நபர் என்று தொகுப்பாளர் கமல்ஹாசன் பலமுறை முகேனை பாராட்டி புகழ்ந்துள்ளார்.

முகேனின் தைரியத்தாலும் மக்களின் ஆசீர்வாததாலும்
பிக் பாஸ் சீசன் 3 வெற்றியாளராக முகேன் ராவ் தேர்ந்தெடுக்கப்பட்டார் .

இவருடைய பாடல் நான் சொல்லுறேன்டி’ பாடல் YOUTUBE – இல் மிகப் பெரிய ஹிட் அடித்தது. பிக்பாஸ்க்கு பிறகு அவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எல்லாம் ரசிகர்கள் அவரை இந்த பாடலை பாடச் சொல்லி கேட்டு ரசித்தனர்.

இந்நிலையில், முகேன் ராவுக்கு ஏன் பட வாய்ப்பு இன்னும் அமையவில்லை என்று பலரும் யோசித்துக் கொண்டிருக்கையில், இன்று திடீரென்று வெப்பம் படத்தின் இயக்குனரான அஞ்சனா அலிகான் இயக்கத்தின் ‘வெற்றி’ என்னும் படத்தில் அவர் அறிமுகமாக உள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் கூட வந்துள்ளது. இந்த படத்தில் கேமராமேனாக எந்திரன், இந்தியன் 2 பணியாற்றிய ரத்னவேலு பணிபுரிகிறார். முகேன் ராவின் இத்தனை நாள் காத்திருப்புக்கு கிடைத்தது தான் இந்த வெற்றி.

Views: - 8

0

0