பிக்பாஸ் வீட்டில் சத்தமில்லாமல் கொடுத்த முத்தம்..! வெளியே ஜோடியாக ஊர் சுற்றும் பிக்பாஸ் பிரபலங்கள்..!

Author: Rajesh
3 February 2022, 8:12 pm

பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் பங்கேற்ற போட்டியாளர்களில் பரபரப்பிற்கு பஞ்சம் இல்லாமல் இருந்தவர் தான் பாவனி. ரசிகர்கள் மத்தியிலும் பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் மூன்றாவது இடத்தை பெற்றார் பாவனி. பிக்பாஸ் நிகழ்ச்சியில் அபிநய் உடன் காதல் கிசுகிசு, அமீருடன் முத்தம் என பரபரப்புக்கு பஞ்சம் இல்லாமல் வலம் வந்தவர் பாவனி. இதனிடையே சின்னத்திரை சீரியல்களில் ஹீரோயினாக நடித்த பாவனி கடந்த 2017-ம் ஆண்டு பிரதீப் குமார் என்பவரை காதலித்து மணந்து கொண்டார். திருமணமான 3 மாதத்தில் பாவனியின் கணவர் பிரதீப் தற்கொலை செய்துகொண்டார்.

அமீருடன் தொடர்ந்து காதலில் கிசுகிசுக்கப்பட்டாலும் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியே வந்த பின்னர் அமீர்-பவானி இருவருமே நாங்கள் நல்ல நண்பர்கள் என்றே கூறி வருகின்றனர். இந்நிலையில் பாவனி மற்றும் அமீர் இருவரும் ஒன்றாக வெளியே சென்றுள்ள ஃபோட்டோ ஒன்று தற்போது இன்ஸ்டாவில் வைரலாகி வருகிறது.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!