பிக் பாஸ் சீசன்- 5 கொண்டாட்ட ப்ரோமோ ஷூட்டிங் – இவங்க மட்டும் மிஸ்ஸிங்..!

Author: Rajesh
28 January 2022, 4:19 pm
Quick Share

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியின் ஐந்தாவது சீசன் கடந்த சில நாட்களுக்கு முன்னர் நிறைவடைந்தது. மற்ற சீசன்களை விட, இந்த சீசனில் பிக்பாஸ் வழங்கிய டாஸ்க்குளாலும், போட்டியாளர்களிடையே நடந்த சண்டைகளாலும் நிகழ்ச்சி சூடுபிடித்தது. இறுதியில் ராஜூ, பிரியங்கா, பாவனி, அமீர், நிரூப் என 5 போட்டியாளர்கள் பைனலிஸ்டுகளாக இருந்தனர். இதனிடையே, பைனல் எபிசோடில் பிக்பாஸ் சீசன்-5க்கான வெற்றியாளர் கோப்பையை ராஜு தட்டிச் சென்றார்.

ஒவ்வொரு சீசன் முடிந்த பிறகும் அதில் கலந்துகொண்ட போட்டியாளர்கள் பிக்பாஸ் கொண்டாட்டத்தில் மீண்டும் அனைவரையும் மகிழ்விப்பார்கள். அந்த வகையில், தற்போது, பிக்பாஸ் கொண்டாட்டத்திற்கான ப்ரமோ ஷூட்டிங் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதில் இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட ஒரு சில போட்டியாளர்கள் மட்டும்தான் கலந்து கொண்டிருக்கிறார்களாம்.

தற்போது, இந்த சீசன் கொண்டாட்டத்தில் ராஜூ, இமான் அண்ணாச்சி, பிரியங்கா, அபிஷேக், பாவனி, இசைவாணி போன்றோரின் புகைப்படங்கள் மட்டும்தான் வெளியேறி இருக்கின்றது. அமீர், சஞ்சீவ், சிபி, அக்ஷரா, வருண், அபிநய், சின்ன பொண்ணு, ஸ்ருதி, நாடியா சிங், நிரூப் போன்றோரை காணவில்லையே என்றும் ரசிகர்கள் தேடி வருகிறார்கள். மீதமுள்ள போட்டியாளர்கள் கலந்து கொள்வார்களா?? இல்லையா?? என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Views: - 402

0

0