நடிப்பில் மட்டுமல்ல படிப்பிலும் பர்ஸ்ட் கிளாஸ் தான்.. வைரலாகும் பிக்பாஸ் அர்ச்சனாவின் 10 & 12th மார்க் ஷீட்..!

Author: Vignesh
8 January 2024, 3:47 pm

என்னதான் சினிமாவில் ஜெயித்து, பெயரெடுத்து, நிலைநாட்டி, மக்கள் மனதில் கொடி நாட்டினாலும், வெள்ளித்திரை நடிகர்களை விட சின்ன திரை நடிகர்கள், மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமானவர்கள்.

முன்பெல்லாம் சினிமாவில் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றால் சீரியலுக்கு வருவார்கள், தற்போது சீரியலில் நடிப்பவர்களுக்கு சினிமா வாய்ப்புகள் கதவைத் தட்டி வருகிறது. இந்நிலையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் ராஜா ராணி 2 சீரியலில் அர்ச்சனா கதாபாத்திரத்தில் நடித்த VJ அர்ச்சனா. அவரது வில்லத்தனமான நடிப்பால் இல்லத்தரசிகள் அவர் மேல் செம கோபத்தில் இருந்தனர்.

archana ravichandran- updatenews360

ஆனால் நிஜத்தில் அவர் ஒரு VJ. சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கியுள்ளார். தற்போது முரட்டு சிங்கிள், கலக்கல் ராஜா, கில்லாடி ராணி போன்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவ்வபோது சமூக வலைதளங்களில் புகைப்படங்களை பதிவேற்றம் செய்யும் அர்ச்சனா, தற்போது சூடான Expressions கொடுத்து மாடர்ன் உடை அணிந்து Photo ஒன்றை வெளியிட்டுள்ளார் அம்மணி. இதைப்பார்த்த ரசிகர்கள் வாயடைத்து கிடைக்கின்றனர்.

bigg boss 7 tamil-updatenews360

இந்நிலையில், பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்டு கார்ட் என்ட்ரி ஆக நுழைந்த அர்ச்சனா நிகழ்ச்சியில், நுழைந்ததிலிருந்து சூப்பரான தனது கேமை விளையாடி வருகிறார். இவர்களுக்கு மக்கள் மத்தியில் ரசிகர்கள் கூட்டமும் அதிகமாக உள்ளது.

Archana

இந்நிலையில், அர்ச்சனாவின் பத்தாம் வகுப்பு மற்றும் பனிரெண்டாம் வகுப்பில் வாங்கிய மதிப்பெண் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது. படிப்பிலும் அர்ச்சனா சிறந்த மாணவியாக இருந்துள்ளார். பத்தாம் வகுப்பில் 500க்கு 491 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார். 12 ஆம் வகுப்பில் 1200 மதிப்பெண்களுக்கு 1005 மதிப்பெண்கள் பெற்று இருக்கிறார்.

Archana
  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!