முதல் நாளே ஆரம்பிச்சிட்டாரேப்பா…. இதுல எது ஆண்கள் கழிவறை? கூல் சுரேஷ் அலப்பறை!

Author: Shree
2 October 2023, 6:02 pm

தமிழ் சினிமாவில் வில்லன், காமெடி என்று சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து ஓரளவு பிரபலமாக இருந்தவர் கூல் சுரேஷ். நடிகர் சிம்புவின் நண்பராகவும், ரசிகராகவும் தன்னை காட்டிக் கொண்டார். வெந்து தணிந்தது காடு படத்தின் ப்ரோமோஷனுக்காக களம் இறங்கி வெந்து தணிந்தது காடு.. சிம்புக்கு வணக்கத்தை போடு என கூவு கூவுனு கூவி பட்டிதொட்டி எங்கும் பிரபலமானார்.

வெந்து தணிந்தது காடு படத்தின் பிரமோஷனில் ஆரம்பித்து தற்போது வரை திரையரங்குக்கு சென்று படத்தை பார்த்து கூல் சுரேஷ் விமர்சனத்தை தெரிவித்து வருகிறார். இதனால் அவர் பரஸ்ட் டே பர்ஸ்ட் ஷோ வெளியாகும்போதெல்லாம் பிரபலமாக பேசப்படுவது வழக்கமாக இருந்து வருகிறது.

வெந்து தணிந்தது காடு படத்திற்கு அவர் கொடுத்த ப்ரோமோஷன் படத்தின் வெற்றிக்கு மிகப்பெரிய பல சேர்த்ததால் அப்படத்தின் தயாரிப்பளாரா ஐசரி கணேஷ் கூல் சுரேஷை நேரில் அழைத்து ஐ போன் ஒன்றை பரிசாக கொடுத்தார். அதுமட்டும் அல்லாமல் அவரது பிள்ளைகளின் படிப்பிற்கான செலவுகளை தானே ஏற்றுக்கொள்கிறேன் என கூறி உறுதியளித்தார். இதனை கேட்டு கூல் சுரேஷ் மிகவும் எமோஷனலாகி ” ஐசரி கணேஷ்” என்னுடைய கடவுள் என கூறி நெகிழ்ந்தார்.

மேலும், சந்தானத்தின் டிடி ரிட்டன்ஸ் என்ற படத்திற்கு சென்னையில் போக்குவரத்து காவலர்களின் உதவியுடன் சாலை விழிப்புணர்வு பணிகளை மேற்கொண்டு ப்ரோமோஷன் செய்தார். அண்மையில் மன்சூர் அலிகானின் சரக்கு பட விழாவில் தொகுப்பாளினிக்கு மாலை அணிவித்து பெரும் சர்ச்சையில் சிக்கினார். இந்நிலையில் தற்போது இவர் பிக்பாஸ் வீட்டில் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளார். அப்போது தனக்கு ஆண்கள் கழிவறை எது? பெண்கள் கழிவறை எது என்று கண்டுபிடிப்பதில் சிரமாக இருப்பதாக ஹவுஸ்மேட்ஸ்களிடம் கூறுகிறார். இந்த வீடியோ இணயத்தில் வைரலாகி வருகிறது.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!