நெருங்கும் கிளைமாக்ஸ்.. இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனில் சிக்கி டேஞ்சர் லிஸ்டில் 2 முக்கிய போட்டியாளர்கள்..!

Author: Vignesh
6 January 2024, 11:00 am

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

bigg-boss-7 - updatenews360

இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.

bigg boss 7

இந்தநிலையில், பிக் பாஸ் சீசன் 7 ல் கடந்த 80 நாட்களை தாண்டி வெற்றி கரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. ஆனால், இதுவரை இந்த சீசனில் யார் டைட்டிலை வெல்வார் என்ற கணிப்பு ரசிகர்களால் யூகிக்க முடியவில்லை. காரணம் ஒருவரின் ஆட்டமும் ரசிகர்களை கவர்ந்தது போல் இல்லை என்பதுதான்.

bigg boss 7 tamil-updatenews360

இந்தநிலையில், பூர்ணிமா 16 லட்சம் பணத்துடன் வெளியேறி விட்டார். இந்த வாரம் எலிமினேஷன் யாரென்ற விவரம் சமூக வலைதளங்களில் வலம் வந்து கொண்டிருக்கிறது. அதாவது, இந்த வாரத்திற்கான நாமினேஷனில் அர்ச்சனா, விசித்ரா, தினேஷ், விஜய் வர்மா, மாயா, மணி ஆகியோர் உள்ளனர். இன்னும் பத்து நாட்களே பைனலுக்கு உள்ளநிலையில், விஷ்ணு டிக்கெட் டூ பினாலே இருந்து வெளியேறி விட்டார். அதன்படி, விஜய் வர்மா மற்றும் மாயா வெளியேறுவார்கள் என தகவல் வெளியாகி உள்ளது. ஏனெனில், அதிக போட்டியாளர்கள் இருப்பதால் கண்டிப்பாக இந்த வாரம் டபுள் எவிக்‌ஷனில் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

  • cooku with comali seasonn 6 contestants list குக் வித் கோமாளியில் சொல்வதெல்லாம் உண்மை? வெளிவந்தது போட்டியாளர்களின் பெயர்கள்!