எங்கே வந்து என்ன வேலை பண்ணிட்டு இருக்கீங்க?.. 2 போட்டியாளர்களுக்கு அரெஸ்ட் வாரண்ட் கொடுத்த பிக் பாஸ்..!

Author: Vignesh
9 October 2023, 4:45 pm

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

bigg-boss-7 - updatenews360

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய்,அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்று உள்ளனர்.

இந்த சீசனில் தான் முதல்முறையாக பிக் பாஸ், ஸ்மால் பாஸ் என இரண்டு வீடுகள் இடம்பெற்றுள்ள நிலையில், இரண்டாவது வீடு சிறைச்சாலை போன்ற விதிகளுடன் இயங்க தொடங்கியுள்ளது.

bigg boss 7

இந்தநிலையில், போட்டியாளர்ளுக்கு ஒரு அதிர்ச்சியாக இரண்டு அரெஸ்டு வாரண்ட் பிறப்பிக்கப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு இருக்கின்றனர். கடந்த வாரம் சரியாக perform செய்யாத அக்ஷயா மற்றும் வினுஷா ஆகிய இருவரையும் தான் சிறைக்கு அனுப்புவதாக பிக் பாஸ் அறிவித்து உள்ளார். இதை கேட்டு மற்ற போட்டியாளர்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

  • enforcement department raid on allu aravind house பண மோசடி புகார்! அல்லு அர்ஜூனின் தந்தை வீட்டில் அமலாக்கத்துறை தீடீர் சோதனை?