பிக்பாஸ் 7டைட்டில் வின்னர் அர்ச்சனா வாங்கிய சம்பளம் எவ்வளவு தெரியுமா…?

Author: Rajesh
15 January 2024, 10:17 am

பிக்பாஸ் 7 டைட்டில் வின்னர் வெற்றிகரமாக முடிவடைந்தது. 23 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக விஜே அர்ச்சனா அறிவிக்கப்பட்டார். அர்ச்சனா வைல்ட் கார்டு என்ட்ரியாக பிக்பாஸ் வீட்டில் நுழைந்து ஆரமபத்தில் இருந்தே மக்களின் மனதை கவர்ந்து பெருவாரியான ரசிகர்கள் கூட்டத்தை பெற்றார் அர்ச்சனா.

இந்நிலையில் பிக்பாஸ் நிகழ்ச்சியில் டைட்டில் வென்றுள்ள அர்ச்சனாவுக்கு ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஒரு பிளாட் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பு ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நாள் ஒன்றிற்கு ரூ. ரூ. 20 ஆயிரம் சம்பளம் வாங்கிய அர்ச்சனா 77 நாட்கள் வீட்டிற்குள் இருந்துள்ள அர்ச்சனாவிற்கு ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

அர்ச்சனா தான் டைட்டில் வின்னர் ஆகவேண்டும் என பெரும்பாலான மக்கள் எதிர்பார்த்தனர். அதே போன்றே அவர் டைட்டில் வென்றுள்ளதை நினைத்து ஆடியன்ஸ் எல்லோரும் ஹேப்பி ஆகிவிட்டனர். இந்நிலையில் அர்ச்சனாவுக்கு சினிமாவில் நல்ல எதிர்காலம் உண்டு என்றும் அவருக்கு படவாய்ப்புகள் கிடைத்து விரைவில் ஹீரோயின் ஆகிடுவார் என்றும் அனைவரும் கூறி வருகின்றனர்.

  • an exciting glimpse video of coolie released கூலி Glimpse வீடியோவில் காணாமல் போன நடிகர்? வலை வீசி தேடும் ரசிகர்கள்! யாரா இருக்கும்?