கணவனை விவாகரத்து செய்யும் அனிதா சம்பத் – உண்மை என்ன ?

16 July 2021, 5:21 pm
Quick Share

செய்தி வாசிப்பாளராக இருந்து அனைவரையும் கவனிக்க வைத்தவர் அனிதா சம்பத். Sun தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளர் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் இருந்தார்கள். இவரின் தோற்றம், தமிழ் உச்சரிப்பு காரணமாகவே இவருக்கு ஏராளமான மரியாதை, இந்த மரியாதை எல்லாம் இவர் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வருவதற்கு முன் நன்றாக இருந்தது.

இவர் விளையாடிய விளையாட்டை பார்த்த ரசிகர்களுக்கு இவரை கொஞ்சம் பிடிக்காமல் போனது. தற்போது மீண்டும் செய்தி வாசிப்பாளராக தொடர்ந்து பணியாற்றி வருகிறார். சிறிது நாட்களுக்கு முன் காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

கணவருடன் இணைந்து யூடியூப் சேனல் நடத்தி வரும் அனிதாவிற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். இந்நிலையில் ஒரு ஆன்லைன் செய்தி பக்கம் அனிதா சம்பத் தனத் கணவரை விவாகரத்து செய்ய போகிறாரா என்ற மாதிரி செய்தி வெளியிட்டது.

தற்போது அதற்கு அனிதா சம்பத் பதிலளித்துள்ளார். அதில், கண்டண்ட் இல்லை என இந்த லெவலுக்கு இறங்கிவிட்டார்களா இந்த கிசுகிசு பக்கங்கள்…? தினமும் நானும் என் கணவரும் யூடியூப் வீடியோக்கள் போடுவதை இந்த சேனலின் அட்மின் பார்த்தது இல்லை போல என கூறி அந்த கிசுகிசுவிற்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.

Views: - 4223

55

60