மருத்துவ முத்தம் கொடுத்துட்டு ஏமாத்தின உனக்கு எப்படி வாய்ப்பு கிடைக்கும்? மோசமான நிலை குறித்து வருந்திய ஆரவ்!

Author: Shree
16 May 2023, 7:00 pm

விஜய் தொலைக்காட்சியில் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் மூலம் பிரபலமானவர் நடிகர் ஆரவ். இவர் ஏற்கனவே விஜய் ஆண்டனி நடிப்பில் உருவான சைத்தான் திரைப்படத்தில் சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். நாகர்கோவிலை பூர்விமாக கொண்ட இவர் ஓ காதல் கண்மணி திரைப்படத்தில் சிறு வேடத்தில் தோன்றியிருந்தார்.

இவருக்கு பெரிய கம்பேக் காக கொடுத்தது பிக் பாஸ் நிகழ்ச்சிதான். அதன் பின்னர் இவருக்கு ஏராளமான ரசிகர்கள் உருவாகினர். அதன் பின்னர் சினிமாவில் இவர் பெரிய ரவுண்ட் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் வெளியான மார்கெட் ராஜா, மார்க்கெட்டில் வந்த வேகத்தில் வெளியேறியது. இருப்பினும் அடுத்தடுத்து படத்தில் கமிட்டாகி நடித்து வருகிறார். இருந்தாலும் ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படி அமையவில்லை.

அண்மையில் பிக்பாஸ் டைட்டில் வென்றும் பட வாய்ப்புகள் இல்லாமல் இருப்பவர்களின் பட்டியல் சோஷியல் வே;மீடியாக்களில் வெளியாகி வைரலானது. இது குறித்து பேட்டி ஒன்றில் ஆரவ்வுடன் கேட்டதற்கு, ‘பிக்பாஸ் சென்றுவிட்டால் பட வாய்ப்பு எல்லாம் வராது” . சின்னத்திரை வேறு சினிமா வேறு. சினிமாவில் ஹீரோவாக வேண்டும் என்றால் பெரிய பேக்ரவுண்ட் இருக்கவேண்டும். ஏதேனும் பிசினஸ் கையில் இருக்கவேண்டும். அதை பார்த்து தான் படவாய்ப்புகள் கிடைக்கும். அதற்கு நிறைய நேரம் எடுத்துக்கொள்ளும் என கூறினார்.

இதனை கேட்ட நெட்டிசன்ஸ், ஆமாம், உனக்கெல்லாம் எப்படி வாய்ப்பு கிடைக்கும். நிகழ்ச்சியில் பேமஸ் ஆகி படம் நடிக்க போ சொன்னால் நீ பிக்பாஸுக்கு வந்து ஓவியாவுக்கு மருத்துவ முத்தம் கொடுத்து லீலைகள் பண்ணிட்டு அந்த புள்ளைய ஏமாத்திட்டு போனல்ல. அதான் ஓவியா பாவம் உன்ன சும்மா விடல என கூறி வருகின்றனர்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!