மட்டமாக மெசேஜ் செய்த நபர்.. மன வருத்தத்துடன் பேசிய அர்ச்சனாவின் மகள் ஜாரா வினீத்..!

Author: Vignesh
18 November 2023, 5:30 pm

பிரபல தொகுப்பாளினிகளில் ஒருவரான விஜே அர்ச்சனா சன் டிவியில் தொகுப்பாளனியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் பிறகு ரியாலிட்டி நிகழ்ச்சி, இசை வெளியிட்டு விழா, மூவி புரமோஷன் ஷோ,ஸ்பெஷல் ஷோ, செலிபிரிட்டி ஷோ என பட்டய கிளப்பி வருகிறார்.

கடந்த சில வருடங்களாக ஜீ தமிழில் பல்வேறு நிகழ்த்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அவருடன் அவரது மகள் ஸாராவும் சேர்ந்து நிகழ்ச்சி தொகுத்து வழங்கி பேமஸ் ஆகிவிட்டார்.

zaara

ஜாராவுக்கு வயது குறைவு தான் என்றாலும் அவர் மெச்சூராக பேசும் விதத்தை பார்த்து பலரும் ஆச்சரியப்பட்டாலும், அதே காரணத்திற்காக அவரை இன்னொரு பக்கம் ட்ரோல் செய்து வருகின்றனர். தொடர்ந்து தன்னை பற்றி வரும் செய்திகளை பற்றி தற்போது, ஸாரா கோபமாக பதிவிட்டு இருக்கிறார். ஜாரா இன்னும் எவ்வளவு காலத்திற்கு இதைப் பற்றி பேசுவீங்க என கேட்டிருக்கிறார். மேலும், அவர் இதோடு நிறுத்திக்கோங்க.. தனது வாழ்க்கையில் எட்டு வயதில் இருந்து சம்பாதித்த பிரச்சினைகளை பற்றியும் அவர் குறிப்பிட்டு இருக்கிறார்.

அதாவது, என் மெச்சூரிட்டி வாழ்க்கை என்பது வாழ்க்கையில் சூழ்நிலைகளுடன் நேரடி தொடர்பு கொண்டதாகவும், 8 வயதில் ஒரு அறுவை சிகிச்சை செய்து 11 வருஷம் அப்பாவுடன் இல்லாமல் வாழ்ந்ததாகவும் மிகவும் எமோஷ்னலாக ஒரு பதிவினை பகிந்துள்ளார். இதற்கு பலர் ஆதரவாக கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!