“நா என்னை சூப்பர் மாடல்னு சொல்லிக்கமாட்டேன்” Big Boss 4-இல் மீரா மிதுனை கிண்டல் செய்த பிரபலம் !

Author: Poorni
8 October 2020, 12:00 pm
Quick Share

வனிதாவிற்கு பிறகு தமிழ்நாடு பேசும் ஒரே பெண்மணி நிகழ்ச்சிக்குள் இருக்கும் நம்ம மீரா மிதுன்தான். இந்த சண்டை இன்னிக்கு நேத்திக்கு இல்ல கடந்த ஒரு வருஷமா நடந்துக்கிட்டு தான் இருக்குது. Big Boss-இல் சேரன் மீது குற்றம்சாட்டினார். அதனைத் தொடர்ந்து வெளியேறியவுடன், கமல் மீது குற்றம்சாட்டினார். மேலும், தொடர்ச்சியாக விஜய் சூர்யா, ஜோதிகா மீது பல்வேறு குற்றச்சாட்டுகளைத் தனது ட்விட்டர் பதிவில் தெரிவித்தார்.

தற்போதைய பிக் பாஸ் 4 சீசன் ஆரம்பித்த நிலையில், வழக்கம்போல் எல்லா போட்டியாளர்கள் தங்களுடைய சோகக் கதைகளை சொல்லும் படலத்தில், சம்யுக்தா என்னும் மாடல், ” நானும் நிறைய விளம்பரப் படங்களில் நடித்திருக்கிறேன், நானும் ஒரு மாடல் தான், ஆனால் என்றைக்கும் என்னை நானே சூப்பர் மாடல் என்று சொன்னது கிடையாது” என்று சொல்லி முடித்த பொழுதில் மற்ற போட்டியாளர்கள் ஆரவாரம் செய்து விசில் அடித்தனர். மறைமுகமாக மீராவை கிண்டல் செய்தது நெட்டிசன்களுக்கு சந்தோஷம் கொடுத்துள்ளது.

Views: - 49

0

0