இவருதான் அர்ச்சனாவோட அவரா? ஆர்ப்பாட்டமே இல்லாம அமைதியாக வந்த க்யூட் ஜோடி!

Author: Vignesh
21 May 2024, 3:08 pm

பிக்பாஸ் 7 – ல் 23 போட்டியாளர்களை கொண்டு துவங்கப்பட்ட இந்த நிகழ்ச்சியின் வெற்றியாளராக வைல்ட் கார்டு என்ட்ரியாக வீட்டில் நுழைந்த விஜே அர்ச்சனா டைட்டில் வென்றுள்ளார். இவருக்கு, ரூ. 50 லட்சம் பரிசாக வழங்கப்பட்டது. அத்துடன் ரூ. 15 லட்சம் மதிப்புள்ள ஒரு பிளாட் மற்றும் ரூ. 15 லட்சம் மதிப்பு ஒரு கார் பரிசாக வழங்கப்பட்டது. பிக்பாஸ் வீட்டில் இருந்தபோது நாள் ஒன்றிற்கு ரூ. 20 ஆயிரம் சம்பளம் வாங்கிய அர்ச்சனா 77 நாட்கள் வீட்டிற்குள் இருந்துள்ள அர்ச்சனாவிற்கு ரூ. 15 லட்சத்து 40 ஆயிரம் சம்பளமாக வாங்கியுள்ளார்.

bigg boss 7 tamil-updatenews360

மேலும் படிக்க: அந்த நடிகையின் வாழ்க்கையை அழிச்சதே அஜித்?.. உடையை கழட்டி அத செய்ய சொல்லி டார்ச்சர்..!

இந்நிலையில், அர்ச்சனா டைட்டில் வென்றதை கோலாகலமாக கொண்டாடியுள்ளார். அதன் வீடியோக்கள் இணையத்தில் வெளியாகி ஆட்டம், பாட்டாம், சர்ப்ரைஸ் என உற்சாகத்துடன் கொண்டாடியிருக்கிறார். தனது நண்பர்கள், மற்றும் குடும்பத்தினருடன் கேக் வெட்டி கொண்டாடிய வீடியோக்களுக்கும் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. அர்ச்சனா பணம் கொடுத்து டைட்டில் வாங்கியதாக பலர் விமர்சித்து வந்த நிலையில் “எவன் என்ன சொன்னால் எனக்கென்ன” என்றவாறு குதூகலத்துடன் கொண்டாடி வீடியோவை வெளியிட்டு இருந்தார்.

இந்நிலையில், தற்போது தனது வாழ்க்கையில் முக்கியமான ஒருவரை அர்ச்சனா கோப்பையுடன் சந்தித்துள்ளார். அவர் வேறு யாரும் இல்லை, ராஜா ராணி 2 சீரியலில் வாய்ப்பை கொடுத்த சின்னத்திரை இயக்குனர் பிரவீன் பென்னெட்-ஐ தான், அர்ச்சனா தனது குருவாக நினைக்கும் நிலையில் இயக்குனர் பிரவீனை சந்தித்து அவர் கையில் தனது பிக் பாஸ் கோப்பை கொடுத்துள்ளார்.

மேலும் படிக்க: கில்லி படத்தின் முதல் சாய்ஸ் பிரகாஷ் ராஜ் இல்லை.. அந்த காரணத்தினால் நடிக்காமல் போன பிரபலம்..!

முன்னதாக, பாரதி கண்ணம்மா சீரியல் நடிகர் அருணை அர்ச்சனா காதலித்து வருவதாக கூறப்பட்ட நிலையில், அருண் மற்றும் அர்ச்சனாவின் காதல் தற்போது உறுதியாக இருக்கிறது. தற்போது, அருண் ஒரு போட்டோ ஷூட்டை எடுத்துள்ளார். அந்த போட்டோஷூட் நடக்கும் போது அர்ச்சனாவும் உடன் இருந்ததாக கூறப்படுகிறது. அது மட்டும் இன்றி போட்டோ ஷூட் வீடியோ கமெண்டில் அர்ச்சனா தேங்க்ஸ் ஃபார் ஷூட்டிங் மை ஹீரோ என போட்டோகிராபருக்கு நன்றி கூறி இருக்கிறார். அதனால், அவர்கள் காதல் உறுதியாக இருப்பதாக நெட்டிசன்கள் கமெண்ட்களில் தெரிவித்து வருகின்றனர் கூறி வருகிறார்கள். மேலும், சிலரோ அருணே உனக்கு எங்கேயோ மச்சம் இருக்குப்பா என்றும் கூறி வந்தனர்.

arun

அண்மையில், அர்ச்சனா ஒரு நிகழ்ச்சிக்கு அவருடைய காதலர் என கூறப்படும் சீரியல் நடிகர் அருனுடன் இணைந்து சென்றுள்ளார். அவர்கள் இதுவரை அதிகாரப்பூர்வமாக தங்களது காதலை வெளிப்படுத்தவில்லை. இந்த நிலையில், இருவரும் ஜோடியாக இருக்கும் புகைப்படம் முதன்முறையாக வெளியாக ரசிகர்கள் க்யூட் ஜோடி என கமெண்ட் செய்து வருகின்றனர்.

archana
archana
  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!