தர்ஷனுக்கு அப்பாவாக நடிக்கும் கே எஸ் ரவிக்குமார்?

24 January 2021, 8:10 pm
Quick Share


பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான தர்ஷன் அறிமுக இயக்குநர்கள் இயக்கத்தில் ஹீரோவாக நடிக்க இருக்கிறார்.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் 3 நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உலகம் முழுவதும் பிரபலமானவர் தர்ஷன். இந்நிகழ்ச்சியில், தர்ஷன் தான் டைட்டில் வின்னராக வருவார் என்று அனைவரும் எதிர்பார்த்தனர். ஆனால், முகென் டைட்டில் வின்னரானார். தர்ஷன் 2 ஆம் இடம் பிடித்தார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு படங்களில் நடிப்பதில், அதிக ஆர்வம் காட்டி வருகிறார
போத்தீஸ், நந்து பிராண்டு லுங்கீஸ், ஸ்ரீ குமரன் என்று பல நிறுவனங்களின் விளம்பரங்களில் நடித்துள்ளார்.

இந்த நிலையில், தர்ஷன் ஹீரோவாக நடிக்கும் படம் குறித்து முக்கியமான தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி, கடந்த 2019 ஆம் ஆண்டு மலையாள சினிமாவில் வெளியாகி ஹிட் கொடுத்த ஆன்ட்ராய்டு குஞ்சப்பன் வெர்ஷன் 5.25 என்ற படத்தின் தமிழ் ரீமேக்கில் நடிக்க இருக்கிறார். இந்தப் படத்தை மாஸ் இயக்குநர் கே எஸ் ரவிக்குமார் தயாரிக்கிறார். அதோடு, தர்ஷனுக்கும் அப்பாவாக நடிக்கிறார்.

இந்தப் படத்தில் தர்ஷனுடன் இணைந்து நகைச்சுவை நடிகர் யோகி பாபுவும் நடிக்கிறாராம். சரவணன் மற்றும் சபரி ஆகியோர் இந்தப் படத்தின் மூலம் இயக்குநர்களாக அவதாரம் எடுக்கின்றனர். இதற்கு முன்னதாக கே எஸ் ரவிக்குமாரிடம் உதவி இயக்குநர்களாக பணியாற்றியுள்ளனர். வரும் பிப்ரவரி மாதம் தர்ஷன் நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Views: - 0

0

0