“முதலில் இந்த பழக்கத்தை நிறுத்து..!” யாஷிகா ஆனந்த்துக்கு அட்வைஸ் பண்ண வனிதா விஜயகுமார்..!

Author: Udayaraman
5 August 2021, 6:42 pm
Quick Share

சமீபத்தில் யாஷிகா ஆனந்த் ஓட்டிவந்த கார் பயங்கர விபத்துக்குள்ளானது. அதில் அவரது நெருங்கிய தோழியான பவானி பலியானது அனைவரையும் சோகத்தில் ஆழ்த்தியது. சிகிச்சை பெற்று வந்த யாஷிகா ஆனந்த் இன்ஸ்டாகிராமில் அடுத்தடுத்து உருக்கமான பதிவுகளை பதிவிட்டிருந்தார்.

யாஷிகா ஆனந்த் இன் பதிவுகளுக்கு பலரும் நெகட்டிவ் கட்சிகளை அளித்து வந்தாலும் சிலர் அவர்களுக்கு ஆறுதலான கமெண்ட் அளித்து வந்தனர். இந்நிலையில் நடிகை வனிதா விஜயகுமார் முதலில் இதை நிறுத்து என அறிவுரை கூறியுள்ளார்.

அதில் விபத்து என்பது யாருக்கு வேண்டுமானாலும் எதிர்பாரா நேரத்தில் நடைபெறும். அதனால்தான் அதற்குப் பெயர் விபத்து. பிறப்பு இறப்பு என்பதெல்லாம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டது. அதை யாராலும் மாற்ற முடியாது.

தற்போதைய பாதிக்கப்பட்ட இடத்தில் இருக்கிறாய். முதலில் உன்னை நீயே திட்டி கொள்வதை நிறுத்திக் கொள். மற்றவர்கள் என்ன சொல்கிறார்கள் என்பதை கண்டுகொள்ள வேண்டாம். இந்த கோர விபத்தில் இருந்து நீ உயிர் பிறைத் அதற்கும் காரணம் இருக்கிறது. கடவுள் உன்னை ஆசீர்வதிப்பார் என ஆறுதல் கூறியுள்ளார்.

Views: - 308

7

1