இவருக்கு இப்படியொரு திறமை இருக்கா? வைரலாகும் வீடியோ!

24 February 2021, 9:59 pm
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான நடிகை ஜூலி தற்போது பாடகியாகவும் தனது திறமையை வெளிப்படுத்தி வருகிறார்.

சென்னையில் நடந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தின் போது அனைவரது கவனத்தையும் தன் பக்கம் கொண்டு வந்தவர் ஜூலி. ஜல்லிக்கட்டு போராட்டம் மூலமாக பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொள்ளும் வாய்ப்பும் வந்தது. இந்நிகழ்ச்சியின் போது எப்போதும் பொய்யாக பேசி அனைவரது எதிர்ப்பையும், ஒரு சிலரது ஆதரவையும் பெற்றார். இந்நிகழ்ச்சிக்குப் பிறகு தொகுப்பாளினியாகவும் அவதாரம் எடுத்தார்.

அதன் பிறகு அடுத்தடுத்து சினிமாவில் நடிக்கும் வந்தது. இவரது நடிப்பில் மன்னர் வகையறா, அம்மன் தாய் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தற்போது, பொல்லாத உலகத்தில் பயங்கர கேம் என்ற படத்தில் நடித்து வருகிறார். எப்போதும், தனது சமூக வலைதளங்களில் புகைப்படங்களையும், வீடியோக்களையும் பதிவிட்டு வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். தற்போது, கூட பாடல் பாடும் வீடியோவை வெளியிட்டுள்ளார்.

இயக்குநர் செல்வராகவன் இயக்கத்தில் வெளிவந்த 7 ஜி ரெயின்போ காலனி படத்தில் இடம் பெற்றிருந்த நினைத்து நினைத்து பார்த்தால் பாடலை பாடி வீடியோ வெளியிட்டுள்ளார். இதனை ஜூலி ரசிகர்கள் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.அடுத்து, பாடகியாக அவதாரம் எடுக்கும் வாய்ப்பு கூட ஜூலிக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.instagram.com/p/CLinyhnBgc6/?utm_source=ig_web_copy_link

Views: - 667

1

0