விரைவில் நடக்க இருக்கும் பிக்பாஸ் கவினின் திருமணம் ! மணப்பெண் லாஸ்லியாவா?

5 December 2020, 11:04 pm
Quick Share

விஜய் டிவி-யில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் கவினும் இடம் பெற்றிருந்தார். அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் அவர் ரசிகர்களுக்கு பரிச்சயமாகியிருந்தார்.

இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியாவுடன் ஏற்பட்ட காதலால் இன்னும் பிரபலமானார். ஏற்கனவே “நட்புன்னா என்னானு தெரியுமா” என்ற படத்தில் கவின் நாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது, லிஃப்ட் படத்தில் அம்ரிதா ஐயருடன் நடிக்கிறார். இதன் Release குறித்து சீக்கிரமே அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில், தற்போது இவருக்கு திருமணம் ஆகப்போகிறது என்று தகவல்கள் வெளிவந்துள்ளது. அந்த பெண் லாஸ்லியாவாக தான் இருப்பார் என எதிர்பார்த்தால், அங்கதான் காத்திருக்கிறது ஒரு திருப்பம். கவின் பிக்பாஸ் நிகழ்ச்சியின் போது சக போட்டியாளர் லாஸ்லியாவை கவின் காதலித்ததாக கூறப்பட்டது.

ஆனால் அந்த நிகழ்ச்சிக்குப் பின் அவர்களது காதல் குறித்து எதுவும் பேசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. இது வேற இல்லாமல் சமீபத்தில் லாஸ்லியாவின் தந்தை வேற காலமாகி விட்டார். இதனால் அவருடைய திருமணம் இப்போதைக்கு நடக்க வாய்ப்பில்லை என்பதால் கவினை திருமணம் செய்யவிருப்பது வேறு பெண் தான் என நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

Views: - 0

0

0