MS தோனி ஸ்டைலில் ரிட்டையர்மென்ட் அறிவித்த Big Boss நடிகர் கவின் ! அதிர்ச்சியில் ரசிகர்கள்!

7 September 2020, 7:49 pm
Quick Share

விஜய் டிவி-யில் நடிகர் கமல் ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சியில் 17 போட்டியாளர்களில் ஒருவராக நடிகர் கவினும் இடம் பெற்றிருந்தார். அத்தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘சரவணன் மீனாட்சி’ சீரியல் மூலம் அவர் ரசிகர்களுக்கு பரிச்சயமாகியிருந்தார்.

இருப்பினும் பிக் பாஸ் நிகழ்ச்சியில், இலங்கையைச் சேர்ந்த லாஸ்லியாவுடன் ஏற்பட்ட காதலால் இன்னும் பிரபலமானார். ஏற்கனவே “நட்புன்னா என்னானு தெரியுமா” என்ற படத்தில் கவின் நாயகனாகவும் நடித்துள்ளார். தற்போது, லிஃப்ட் படத்தில் அம்ரிதா ஐயருடன் நடிக்கிறார். இதன் Release குறித்து சீக்கிரமே அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் நடிகர் கவின், இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் தோனி ஸ்டைலில் ஒரு வீடியோவை ஷேர் செய்து ஓய்வை அறிவித்துள்ளார். அதில் இதுவரை உங்கள் அன்புக்கும் ஆதரவிற்கும் மிக்க நன்றி. 20:24 மணி முதல் என்னை ஓய்வு பெற்றவராக கருதுகிறேன் ” என எம்.எஸ். தோனி பாணியில் பதிவிட்டிருந்தார்.

இதைப் பரத்தவுடன் கவின் ரசிகர்களுக்கு பக்குனு ஆகிவிட்டது. நெஞ்சை பிடித்தபடி அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்த பிறகுதான் அவர்களுக்கு இதய துடிப்பே வந்தது. எல்லாம் இளைஞர்களை போலவே கவினும் Pub-G விளையாட்டின் மிகப் பெரிய ரசிகர் போல. அதனால்தான் அந்த விளையாட்டுக்கான தடை அவரை கவலையில் ஆழ்த்தியுள்ளது.

Views: - 0

0

0