கால்பந்து வீரருடன் பிக் பாஸ் பூர்ணிமா?.. ரொமான்ஸ் புகைப்படத்தால் தலைசுற்றி போன ரசிகர்கள்..!

Author: Vignesh
18 December 2023, 4:45 pm

பிக்பாஸ் சீசன் 7 தற்போது வேறலெவலில் போய்க்கொண்டிருக்கிறது. அதற்கு முக்கிய காரணமே இரண்டூ வீடுகள்தான். இதில் முக்கியமான ஜோடியாக இருப்பது மாயா பூர்ணிமா. இவர்கள் செய்யும் அட்ராசிட்டிஸ்களுக்கு அளவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது.

இந்த நிலையில் பூர்ணிமா மாயா இல்லாமல் தனியாக விளையாடினால் சிறப்பாக இருக்கும் என்றும் பலர் கருத்து கூறி வந்தனர். அதோடு பூர்ணிமா சில வாரங்களுக்கு முன்பு எலிமினேஷனில் இருந்த நேரத்தில் அந்த வாரத்தில் கண்டிப்பாக வெளியேறுவார் என்றும் ரசிகர்கள் உறுதியாக இருந்தனர். ஆனால் அந்த வாரத்தில் எலிமினேஷன் கேன்சல் செய்யப்பட்டது. இது பூர்ணிமாவுக்கு சூப்பர் ஆஃபராக அமைந்து இருந்தது.

இந்த நிலையில் சமீபத்தில் சில வாரங்களாக பூர்ணிமாவின் விளையாட்டு மாற்றம் பெறுகிறது என்று பல ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதோடு பூர்ணிமாவின் கேரக்டர் இப்போது ரசிகர்களுக்கு பிடிக்கத் தொடங்கி இருக்கும் நிலையில், பூர்ணிமா மாயாவிடம் இருந்து கொஞ்சம் கொஞ்சமாக விலகி விஷ்ணு கேங்கோடு சேர்ந்து கொண்டிருக்கிறார். இதனால் விஷ்ணுவை பூர்ணிமா காதலிக்கிறாரா என்ற கேள்விகள் ரசிகர்களின் மத்தியில் எழுந்து வருகிறது.

இந்த நிலையில், பிரபல கால் பந்து வீரர் மெஸ்ஸி தனது மனைவி அன்டோனெலா ரொக்குசோ உடன் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி உள்ளது. அந்த புகைப்படத்தில் மெஸ்ஸியின் மனைவி பார்ப்பதற்கு அப்படியே பிக் பாஸ் பூர்ணிமா போல் இருக்கிறார் என்று நெட்டிசன்கள் கமெண்டில் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!