“யோவ் என்னை நாமினேட் பண்ண வேற ரீசனே இல்லையா” காண்டான ஷிவானி !

30 November 2020, 12:32 pm
Quick Share

பிக்பாஸ் நிகழ்ச்சியில் இன்று வெளியான முதல் Promoவில் வழக்கம்போல ஆரி, சனம் அதன் பின் ரம்யா மற்றும் ஷிவானி ஆகியோர்களை சக போட்டியாளர்கள் நாமினேட் செய்ததாக பார்த்தோம். இப்போதெல்லாம் எதற்காக நாமினேட் செய்யப்படுகிறார்கள் என்கிற காரணத்தை சக போட்டியாளர்கள் கூறியதை பிக்பாஸ் கடந்த சில வாரங்களாக கூறி வருகிறார்.

அப்படி இருக்கையில் இந்த வாரம் நாமினேட் செய்ததற்கான காரணங்களாக போட்டியாளர்கள் கூறியது இது தான்: எல்லாரையும் தப்பா புரிஞ்சிகிறாரு, வீட்டோட அமைதியை கெடுக்குறாங்க, சிரிச்சுகிட்டே பேசி ஹர்ட் பண்றாங்க, பாலாவோட ஷேடோவுல தான் இருக்காங்க போன்ற காரணங்கள் கூறப்பட்டுள்ளது.

“யோவ் என்னை நாமினேட் செய்யறதுக்கு வேற காரணமே இல்லையா” என்று சக போட்டியாளர்களிடம் புலம்புகிறார். அதேபோல் ஷிவானிக்கு கூறிய காரணம் குறித்து பாலாஜி கூறுகையில் “இது ரொம்ப தப்பா இருக்கு” என்று கூறுகிறார்.

Views: - 21

0

0