தொடங்கியது பிக்பாஸ் சீசன் 9? சர்ப்ரைஸாக அப்டேட் விட்ட விஜய் டிவி!
Author: Prasad1 September 2025, 4:13 pm
தொடங்கியது பிக்பாஸ் சீசன் 9
சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற “பிக்பாஸ்” நிகழ்ச்சியின் 9 ஆவது சீசன் விரைவில் தொடங்கப்பட உள்ளது. பிக்பாஸின் முதல் 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில் 8 ஆவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். இதனை தொடர்ந்து பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9 ஆவது சீசனையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்க உள்ளார்.
இந்த சீசனில் விஜே பார்வதி, நேஹா மேனன், பால சரவணன், அம்ரிதா ஸ்ரீனிவாசன், புவி அரசு, வினோத் பாபு, சதீஷ் கிருஷ்ணன், ஷாபனா ஷாஜகான், உமைர், அக்சிதா அசோக் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளதாக ஒரு உத்தேச பட்டியல் வெளியானது. ஆனால் இது குறித்த எந்த அதிகாரப்பூர்வ தகவலும் வெளிவரவில்லை.
விஜய் டிவி வெளியிட்ட அப்டேட்
இந்த நிலையில் விஜய் தொலைக்காட்சி “பிக்பாஸ் சீசன் 9” நிகழ்ச்சி குறித்த ஒரு அப்டேட்டை வெளியிட்டுள்ளது. அதாவது இன்று மாலை 6 மணிக்கு “பிக்பாஸ் சீசன் 9” குறித்த அதிகாரப்பூர்வ அப்டேட்டை வெளியிட உள்ளதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் விஜய் தொலைக்காட்சி அறிவித்துள்ளது. இந்த அப்டேட்டால் பலரும் மிக ஆவலோரு காத்துக்கொண்டிருக்கின்றனர்.
