செருப்பால் சினேகனை…. திமிர் பிடித்தவரா இளையராஜா? கன்னிகா காட்டம்!

Author: Shree
3 June 2023, 11:02 am
ilayaraja 1
Quick Share

கவிஞர் சினேகன் தமிழ் சினிமாவில் எத்தனையோ ஹிட் பாடல்களை கொடுத்தவர். இவர் முதல் பிக்பாஸ் சீசனில் கலந்துகொண்ட பிறகு தான் இந்த அருமையான பாடல்களை எழுதியது இவரா என ரசிகர்கள் ஆச்சரியப்பட ஆரம்பித்தார்கள்.

பிக்பாஸ் பிறகு சினேகன் அரசியலில் ஈடுபட்டு பிஸியாக இருந்தார். அதன்பிறகு பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்துகொண்டார். ஆனால் இடையிலேயே வெளியேறினார். இடையில் இவருக்கு நடிகை கன்னிகாவிற்கும் திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பின்னர் எல்லா பொது நிகழ்ச்சிகளுக்கும் இருவரும் ஒன்றாக சேர்ந்து செல்லும் வீடியோ மற்றும் புகைப்படங்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்நிலையில் இளையராஜா நேற்று தனது 80வது பிறந்தநிலை கொண்டாடினார். அவரை சென்று சந்தித்த சினேகன் – கன்னிகா ஜோடி இளையராஜாவின் காலில் விழுந்து ஆசீர்வாதம் வாங்கிய வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டு “இன்று பிறந்தநாள் காணும் இசைஞானியின் ஆசி நிறைந்த அன்பைப் பெற்ற மகிழ்வான தருணம்” என கூறி பதிவிட்டிருந்தார்.

இந்த வீடியோவில் செருப்பு காலோடு இளையராஜா ஆசீர்வாதம் செய்ததை நெட்டிசன்ஸ் விமர்சித்து அவர் முதுமை வயதை நெருங்கியும் இன்னும் திமிர் பிடித்தவராக தான் இருக்கிறார் என மோசமான விமர்சித்தனர். இதற்கு பதிலடி கொடுத்த கன்னிகா,

‘அவர தப்பா நினைக்காதீங்க. அவருக்கு சில மெடிக்கல் பிரச்னையால் எப்போதும் வீட்ல கூட சாக்ஸ் அல்லது செருப்பு போட்டு தான் இருப்பாரு’ என்று பதில் கூறியுள்ளார். இதற்கு முன்னர் இளையராஜா சினேகன் திருமணத்திற்கு வரமுடியவில்லை என்பதால் புதுமண ஜோடியை நேரில் அழைத்து அவர்களுக்கு ஒரு தங்க மோதிரத்தையும் கல்யாண பரிசாக அளித்து இருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.instagram.com/reel/Cs-vU2xxEPp/?utm_source=ig_web_copy_link&igshid=MzRlODBiNWFlZA==

Views: - 343

4

1