பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியில் கலந்துகொள்ளப்போகும் போட்டியாளர்கள்? யார் யார்னு பாருங்க…
Author: Prasad20 August 2025, 11:08 am
மாபெரும் வரவேற்பை பெற்ற நிகழ்ச்சி
சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியின் 9 ஆவது சீசன் தொடங்கப்படவுள்ளது. பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கப்பட்டதில் இருந்து 7 சீசன்களை கமல்ஹாசன் தொகுத்து வழங்கினார். கடந்த 8 ஆவது சீசனை விஜய் சேதுபதி தொகுத்து வழங்கினார். அதனை தொடர்ந்து பிக்பாஸ் சீசன் 9 நிகழ்ச்சியையும் விஜய் சேதுபதியே தொகுத்து வழங்கவுள்ளார்.
பிக்பாஸ் தமிழ் சீசன் 9 நிகழ்ச்சி வருகிற அக்டோபர் மாதம் தொடங்கப்படவுள்ளதாக கூறுகின்றனர். அந்த வகையில் சீசன் 9-ல் கலந்துகொள்ளப்போகும் பத்து போட்டியாளர்கள் குறித்த பட்டியல் ஒன்று இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

கலந்துகொள்ளப்போகும் 10 போட்டியாளர்கள்?
விஜே பார்வதி
நேஹா மேனன் (பாக்கியலட்சுமி சீரியல் நடிகை)
பால சரவணன்
அம்ருதா ஸ்ரீனிவாசன்
நடிகர் புவி அரசு
நடிகர் வினோத் பாபு
சதீஸ் கிருஷ்ணன் (நடன் இயக்குனர்)
ஷாபனா ஷாஜஹான்
உமைர்
நடிகை அக்சிதா அசோக்
இந்த 10 பேர் பிக்பாஸ் சீசன் 9க்கான ஆடிஷனில் கலந்துகொண்டதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இதில் ஷாபனா, உமைர் ஆகியோர் தற்போது குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் பங்கேற்று வருவது குறிப்பிடத்தக்கது.
