விஜய்யின் வாரிசு பட பாடலுக்கு குத்தாட்டம் போட்ட விஜய்சேதுபதியின் ரீல் மனைவி.. டிரெண்டிங் வீடியோ இதோ..!

Author: Vignesh
14 November 2022, 7:15 pm

விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெறும் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி பிக்பாஸ் பிரபலம் ஷிவானி, ரீல்ஸ் வீடியோ ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர் நடிகை ஷிவானி. இவர் தற்போது தமிழ் சினிமாவில் பிஸியான நடிகையாக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் இதுவரை விக்ரம் திரைப்படம் மட்டும் ரிலீஸ் ஆகி உள்ளது. அப்படத்திலும் நடிகர் விஜய் சேதுபதிக்கு மனைவியாக சிறிய வேடத்தில் தான் நடித்திருந்தார்.

Shivani-Narayanan-updatenews360-1

அடுத்ததாக ஜீவி பட நடிகர் வெற்றிக்கு ஜோடியாக பம்பர் எனும் படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாக உள்ளார் ஷிவானி. இது தவிர நடிகர் விஜய் சேதுபதியுடன் இணைந்து டிஎஸ்பி எனும் படத்திலும் நடித்திருக்கிறார். இப்படத்தை ரஜினிமுருகன் படத்தின் இயக்குனர் பொன்ராம் இயக்கியுள்ளார். இப்படத்தில் போலீஸாக நடித்திருக்கிறார் ஷிவானி.

அதேபோல் வடிவேலுவின் கம்பேக் திரைப்படமான நாய்சேகர் ரிட்டர்ன்ஸ் படத்திலும் கவர்ச்சி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இப்படம் வருகிற டிசம்பர் மாதம் ரிலீஸ் ஆக உள்ளது. இவ்வாறு கைவசம் அரை டஜன் படங்களுடன் செம்ம பிசியாக நடித்து வந்தாலும், இன்ஸ்டாகிராமில் தொடர்ந்து ஆக்டிவாக இருந்து வருகிறார் ஷிவானி.

Shivani-Narayanan-updatenews360-1

அதில் இவர் பதிவிடும் கவர்ச்சி புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களை பார்ப்பதற்கான தனி ரசிகர் பட்டாளமே உள்ளது. சமீபத்தில் கூட மழையில் நனைந்தபடி இவர் வெளியிட்ட ரீல்ஸ் வீடியோவுக்கு லட்சக்கணக்கில் லைக்குகள் குவிந்தன. இந்நிலையில் தற்போது ட்ரெண்டிங்கில் உள்ள விஜய்யின் வாரிசு படத்தில் இடம்பெறும் ரஞ்சிதமே பாடலுக்கு நடனமாடி ரீல்ஸ் வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். அப்பாடலுக்கு ஷிவானி ஆடியுள்ள கவர்ச்சி நடனம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

  • ilaiyaraaja used yuvan shankar raja tune in his song தனது மகன் போட்ட ட்யூனையே காப்பி அடித்த இளையராஜா? இப்படி எல்லாம் நடந்துருக்கா?