இது பிக்பாஸா? இல்ல.. மாயாபாஸா? ஃபுல் பார்மில் அந்நியனாக உருமாறிய அர்ச்சனா..!

Author: Vignesh
7 November 2023, 5:24 pm

பிக் பாஸ் வீட்டில் 36 வது நாள் ஆடலும் பாடலுடன் துவங்க மறுப்பக்கம் விசித்ரா, தினேஷ், அர்ச்சனா உள்ளிட்டோர் பிரதீப் வெளியேற்றும் குறித்து வருத்தமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதில், நேற்றைய எபிசோடு மட்டும் ஒரே நாளில் எவ்வளவு கண்டன்ட் கிடைச்சா.. என்ன பண்றது என்கிற மூடில் பிக் பாஸ் எடிட்டர்கள் திணறிப் போகும் அளவிற்கு நேற்றைய சம்பவங்கள் இருந்தது.

குறிப்பாக பிக் பாஸ் வைல்காடு என்ட்ரியா வந்த அர்ச்சனா முதல் சில நாட்கள் அழுது கொண்டே இருந்த நிலையில், கமலஹாசன் மற்றும் பிக் பாஸ் அறிவுரைக்குப் பின்னர் தற்போது களத்தில் குதித்துள்ளார். அதாவது, பிரதீப் இருந்திருந்தால் கூட மாயா பூர்ணிமாவை இந்த அளவிற்கு கதற விட்டிருப்பாரா என்று கேட்கும் அளவிற்கு அவர் விட்டு சென்ற வேலையை அர்ச்சனா செய்துள்ளார்.

அதாவது, ஸ்மால் பாஸ் வீட்டில் உள்ளவர்களை கேப்டன் பொறுப்பில் இருக்கும் மாயா அலட்சியப்படுத்தி வரும் நிலையில், அவருக்கு சரியான பதிலடியை அர்ச்சனாவும், விசித்திராவும் கொடுத்துள்ளனர். இந்த நிலையில், சற்றுமுன் வெளியான பிரமோவில் பிக் பாஸ் என்ற பெயர் வைப்பதற்கு பதிலாக மாயா பாஸ் என்று வைத்திருக்கலாம்.

ஒருவேளை மாயா டைட்டிலை வென்று விட்டால் இத்தனை பேரை எமோஷனலாக காலி பண்ணிட்டு இந்த டைட்டிலை பெறுகிறோம் என்ற குற்ற உணர்வு இருக்காதா என்று கேள்வி எழுப்பி உள்ளார். மேலும், மாயா கேப்டன் ஆக வந்தால் சரியாக போட்டியாளர்களை ஹேண்டில் பண்ணுவார் என்று நினைத்தேன். ஆனால், அவர் இப்படி நடப்பார் என்று நான் நினைக்கவே இல்லை.

ரொம்ப சீப்பா நடந்து கொள்கிறார் என்று ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார். இவர்களுக்கும் ரெட் கார்டு வாங்கி போனவருக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என்று அர்ச்சனா ஆவேசமாக கூறும் வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகியுள்ளது. இதனை பார்த்த நெட்டிசன்கள் அர்ச்சனா ஃபுல் பார்மில் தற்போது, அந்நியனாக மாறியிருப்பதாக கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!