பிக் பாஸ் TITLE WINNER-ஐ இரவோடு இரவாக கைது செய்த போலீஸ்… பின்னணியில் பகீர் காரணம்.. வைரலாகும் வீடியோ!!

Author: Babu Lakshmanan
21 December 2023, 2:41 pm

பிக் பாஸ் டைட்டில் வின்னரை போலீசார் கைது செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தமிழில் கமல் தொகுத்து வழங்கி வருவதைப் போலவே தெலுங்கில் பிக் பாஸ் நிகழ்ச்சியை நடிகர் நாகர்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். அண்மையில் தான் தெலுங்கு சீசன் 7 முடிந்தது. இதில் தமிழில் பிரபலமான கிரண், ஷகீலா உட்பட்ட 18 போட்டியாளர்கள் கலந்து கொண்டனர். திரையுலக பிரபலங்கள் இருந்தாலும், யூடியூப் மூலம் பிரபலமான பல்லவி பிரசாத் டைட்டில் வின்னராக தேர்வு செய்யப்பட்டார்.

விவசாயம் தொடர்பான தகவல்களை தனது யூடியூப் பக்கத்தின் மூலம் பகிர்ந்து வருவதன் மூலம் பிரபலமான இவருக்கு அதிகமான ரசிகர்கள் இருக்கின்றனர். பிக் பாஸ் நிகழ்ச்சியில் இவருக்கு போட்டியாக விஜய் டிவி சீரியல் நடிகை தேஜஸ்வினியின் கணவர் அமர்தீப் திகழ்ந்தார்.

இந்த நிலையில் அமர்தீப் பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறி கார் மூலம் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். அப்போது, பல்லவி பிரசாந்தின் ரசிகர்கள் சிலர் அமர்தீப் காரை மறித்து அடித்து உதைத்ததாகக் கூறப்படுகிறது. இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பல்வேறு பிரபலங்களும் இந்த செயலுக்கு கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.

இது தொடர்பான புகாரில் பல்லவி பிரசாத் மற்றும் அவரது ரசிகர்கள் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த நிலையில், பல்லவி பிரசாத்தை போலீசார் நேற்று கைது செய்துள்ளனர். அவரை நேற்று டிசம்பர் 20 கைது செய்யப்பட்டார். அவரிடம் ஜூபிளி ஹில்ஸ் போலீசார் இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

  • G.V. Prakash understood Sainthavi at the time of separation.. Affection blossomed during the divorce case பிரியும் நேரத்தில் சைந்தவியை புரிந்து கொண்ட ஜி.வி பிரகாஷ்.. விவாகரத்து வழக்கில் மலர்ந்த பாசம்!