சிம்புவிடம் “ஐ அம் வெயிட்டிங்” சொன்ன பிக்பாஸ் டைட்டில் வின்னர் ஆரி

20 January 2021, 3:19 pm
Quick Share

கிருஷ்ணா இயக்கத்தில் நெடுஞ்சாலை படத்தில் நடித்திருந்தார் ஆரி. திரைக்கதை விறுவிறுப்பாக இருந்ததால் நெடுஞ்சாலை படம் வெற்றி பெற்றது. தற்போது முடிந்த பிக் பாஸ் சீசன் 4 இல் கலந்துகொண்டு டைட்டில் வின்னர் ஆக வெற்றி பெற்றார் ஆரி . பல்வேறு அவமானங்களையும், சண்டைகளையும், சங்கடங்களையும் சந்தித்து ஆரி அதில் வெற்றி பெற்றார்.

இந்நிலையில் பிக் பாஸ் வீட்டை விட்டு வெளியே வந்த அவர் சிம்பு நடிப்பில் வெளியாகவிருக்கும் பத்து தல படத்துக்காக காத்திருப்பதாக ட்வீட் செய்துள்ளார். பத்துத்தலை படத்தை நெடுஞ்சாலை படத்தின் இயக்குனர் கிருஷ்ணாவே இருக்கிறார். கிருஷ்ணா இதற்கு முன் நெடுஞ்சாலை மற்றும் சில்லுனு ஒரு காதல் போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.

இரண்டு நாட்களுக்கு முன் வெளியான பத்து தல படத்தின் போஸ்டரை பகிர்ந்து ட்வீட் செய்துள்ள ஆரி, ” எனது நெடுஞ்சாலை படத்தின் இயக்குனர் கிருஷ்ணாவுக்கு வாழ்த்துக்கள். சிம்பு, கௌதம் கார்த்திக், கிருஷ்ணா ஆகியோரின் ஆட்டத்தை பார்க்க காத்திருக்கிறேன்” என்று அதில் கூறியுள்ளார். இந்த ட்வீட்டை சிம்பு கௌதம் கார்த்திக் ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர்.

Views: - 0

0

0