அடிச்சு சாவடிச்சு இந்த இடத்தை எடுத்துக்கோ.. போட்டியாளர்களுக்கு ஷாக் கொடுத்த பிரதீப்..!(வீடியோ)

Author: Vignesh
26 October 2023, 10:30 am

இந்திய தொலைக்காட்சிகளில் பல மொழிகளில் பரவலாக ஒளிபரப்பப்படும் நிகழ்ச்சிகளில் ஒன்றான பிக்பாஸ் ரியாலிட்டி ஷோ தமிழில் இதுவரை 6 சீசன்கள் முடிந்துள்ளது கமல் ஹாசன் தொகுத்து வழங்கி வரும் இந்நிகழ்ச்சிக்கு பெருவாரியான ரசிகர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது, அடுத்த சீசனாக பிக்பாஸ் 7 நிகழ்ச்சி துவங்கி உள்ளது.

இந்த சீசனில் கூல் சுரேஷ், அக்‌ஷயா உதயகுமார், ஐஷூ, விஜய் வர்மா, ஜோவிகா விஜயகுமார், பிரதீப் ஆண்டனி, பவா செல்லதுரை, விஷ்ணு விஜய், அனன்யா ராவ், பூர்ணிமா ரவி, சரவண விக்ரம், வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், மாயா கிருஷ்ணா, விசித்ரா, நிக்ஸன், மணி சந்திரா, ரவீனா தாஹா என மொத்தம் 18 பேர் போட்டியாளர்களாக பங்கேற்றுனர்.

இந்த சீசனில் வெகு சீக்கிரத்தில் போட்டியாளர்களுக்கிடையே போட்டியும், மோதலும் உருவாகிவிட்டது. இதில் அனன்யா பாண்டே எலிமினேட் செய்யப்பட்டார். பவா செல்லத்துரை போட்டியில் இருந்து விலகிவிட்டார். அவரைத் தொடர்ந்து விஜய்யும் எலிமினேட் செய்யப்பட்டார்.

இதற்கிடையில், பிக் பாஸ் வீட்டில் கடும் போட்டிகள் நடந்து வரும் நிலையில், பிரதீப் தனி ஒரு ஆளாக நின்று அனைவரிடமும் கேள்வி கேட்டு வறுத்தெடுத்து வருகிறார். பிக் பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டது. யார் தங்களை வெற்றியாளர் என்று நினைத்து 1 லிருந்து 15 இடத்தில் நிற்க வேண்டும் அப்படி தான் வெற்றி போட்டியாளர் என்று பிரதீப் நிற்க, அவருக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். நிக்சன், வினுஷா, ஐஷூ உள்ளிட்ட அவர்களுடன் பிரதீப் வாக்குவாதமும் செய்தார். அப்போது, நான் பெரிய ஆர்ட்டிஸ்ட்ன்னு நிரூபிக்க இந்த காசு இந்த இடம் தேவை யாருக்காகவும் இந்த இடத்தை விட்டுக் கொடுக்க மாட்டேன். என்னையும் அடிச்சு சாவடிச்சிட்டு எடுத்துக்கோங்க என்று ஆணித்தரமாக பேசிய பிரமோ வீடியோ தற்போது இணையதளத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

  • tourist family negative review from valaipechu team படம் வர்ரதுக்கு முன்னாடியே நெகட்டிவ் விமர்சனம்; டூரிஸ்ட் ஃபேமிலி குறித்து வாய்விட்ட பிரபலம்!