திரிஷாவின் Ex காதலருடன் டேட்டிங்… காதலை ஒப்புக்கொண்ட பிரபல நடிகை!

Author: Shree
9 May 2023, 7:49 am

90ஸ் கிட்ஸ்களின் கனவுக்கன்னியாக திகழ்ந்து முன்னணி நடிகையாக திகழ்ந்து வந்தவர் நடிகை திரிஷா. மிஸ் சென்னை பட்டத்தை வென்று நடிகையாக களமிறங்கிய திரிஷா முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து கொடிக்கட்டி பறந்தார்.

அப்படி இருந்த திரிஷா மார்க்கெட் இழக்க அந்த திருமணமே காரணமாக அமைந்தது. தொழிலதிபருடன் காதல் ஏற்பட்டு நிச்சயம் வரை சென்று கருத்து வேறுபாட்டால் திருமணத்தை நிறுத்தியது தான் காரணம். அந்த நிச்சயம் சில பெரியவர்களின் தலையீட்டால் தான் நின்றது என பேட்டி ஒன்றில் திரிஷாவின் அம்மா கூறினார்.

மேலும், திருமணத்திற்கு சினிமாவில் நடிக்க கூடாது என பிறகு மாப்பிளை வீட்டை சேர்ந்தவர்கள் எச்சரித்து பிளாக்மெயில் செய்ததாக மறைமுகமாக பேட்டி ஒன்றில் கூறினார். அதன்பின் சினிமாவிலும் திருமணத்திலும் தோல்வியை கண்டதால் 39 வயதாகியும் திருமணம் செய்யாமல் வாழ்ந்து வருகிறார்.

இந்நிலையில் திரிஷாவின் முன்னாள் காதலரான வருண் மணியன் உடன் பிரபல நடிகை பிந்து மாதவி டேட்டிங் சென்ற புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வருணை கட்டியணைத்து நெருக்கமாக எடுத்துகொண்ட புகைப்படங்கள் பார்த்து திரிஷாவின் ரசிகர்கள் செம ஷாக் ஆகிவிட்டனர். ஓஹ்… இதனால் திரிஷா வருணை திருமணம் செய்யவில்லையா? என கேட்டு வருகின்றனர். இதுகுறித்து பிந்து மாதவியிடம் பத்திரிக்கையாளர்கள் கேள்வி கேட்டதற்கு, நான் அவருடன் டேட்டிங் சென்றது உண்மை தான். ஆனால் திரிஷாவை பிரிந்த பின் தான் அவருடன் டேட்டிங் சென்றேன் என கூறி வருணை காதலித்தை இதன் மூலம் ஒப்புக்கொண்டுள்ளார்.

  • yogi babu explains about not attended gajaana audio release function பொய் பொய்யா பேசாதீங்க- தரக்குறைவாக பேசிய தயாரிப்பாளருக்கு யோகி பாபு பதிலடி!